கேந்திர திரிகோண ராஜயோகம் பலன் 2025 | After 30 Years Kendra Trikona Raja Yoga Benefit 2025
ஜோதிடத்தில் சனி பகவான் முக்கியமான கிரகமாக இருக்கிறார். சனி பகவான் மெதுவாக நகர கூடியவர். மற்ற கிரகங்களின் பெயர்ச்சி எப்படி எல்லா ராசிகளிலும் தெரிகிறதோ அதே போலத்தான் சனி பகவானும் எல்லா ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். இவர் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசிகளை மாற்றி கொண்டாலும் ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவார். தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இவை 2027-ம் ஆண்டு ஜூன் வரை அங்கையே இருப்பார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் மீன ராசியில் நுழைந்துள்ளதால் கேந்திர திரிகோணம் ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனுடைய தாக்கம் ஆனது எல்லா ராசிகளும் பட்டாலும் சில ராசிகளுக்கு மட்டும் பலனை அள்ளி தரப்போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
மீனம்:
மீனா ராசியில் முதல் வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் முடிவடைந்து, இரண்டாம் கட்டம் தொடங்கியுள்ளது. மறுபுறம் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளதால், வருமானத்திற்கு எந்த குறையுட் இருக்காது. செல்வ செழிப்பு ஆனது அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்ப்பாராத லாபம் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு வருமானம் ஆனது அதிகமாக கிடைக்கும். பணியிடத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
மகரம்:
கேந்திர திரிகோண ராஜயோகம் ஆனது மகர ராசியில் 3-வைத்து வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியிலுருந்து விடுபடுகிறார்கள். நீங்கள் செய்யும் எல்லா செயல்களுக்கும் அதிர்ஷ்டம் ஆனது கூடவே இருக்கும்.பணியில் தடைகள் இருந்தால் அவை விலகும் நேரமாக இருக்கிறது. நீங்கள் தொழிலில் எதாவது புதிதாக திட்டம் வைத்திருந்தால் அவை இந்த நேரத்தில் செயல்படுத்தினால் வெற்றி கிடைக்கும். பணவரவு ஆனது அதிகமாக காணப்படும். இதனை பயனுள்ள வகையில் முதலீட்டை சேமிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனது அதிகாரிக்கும்.
மிதுனம்:
கேந்திர திரிகோண ராஜயோகம் ஆனது மிதுன ராசியில் 10-வது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் இடஙக ராசிகாரர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக உள்ள வேலை கூட இந்த நேரத்தில் முடிவடையும். தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் இந்த நேரத்தில் லாபம் ஆனது எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைக்கும். புதிதாக நிலம், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு ஆனது அதிகரிக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












