அகத்தியர் நாடி ஜோதிடம் | Agathiyar Naadi Jothidam
Agasthiyar Nadi Jothidam:- அகத்தியர் என்பவர் தமிழ் சித்தர்களின் முதன்மை சித்தர் ஆவர். அகத்தியர் சித்த வைத்தியத்திற்கு செய்த பணி சிறப்பானது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் அகத்தியர் சிறந்த ஜோதிட மகரிஷியும் கூட குறிப்பாக நாடி ஜோதிடத்தில் அகத்தியரின் நாடி ஜோதிடம் தனி ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. பனை ஓலைச் சுவடிகளில் உலகில் பிறக்கும் அனைவரது ஜாதகங்களும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான ஜோதிட பலன்களை அதாவது பிறப்பு முதல் இறப்பு வரை சொல்வதோடு அவர்களின் முன் ஜென்ம வரலாறும் சுருக்கமாக கூறப்படுவதைக் கண்டு வியங்காதவர்களே கிடையாது.
சரி இந்த பதிவில் அகத்தியர் நாடி ஜோதிடம் என்றால் என்ன என்பதை பற்றி படித்தறியலாம் வாங்க.
அகத்தியர் நாடி ஜோதிடம் என்றால் என்ன?
நாடி ஜோதிடம் பார்க்க முதலில் ஆண் என்றால் வலது கைப் பெருவிரலும், பெண் என்றால் இடத்து கை பெருவிரலும் காட்டப்பட வேண்டும்.
அகத்தியரின் நாடி ஜோதிட சுவடுகளில் தம்மிடம் உள்ள சுவடிகளில் குறிப்பிட்ட ஜாதகரின் ஜாதக பலன் இருக்கிறதா என்று ஜோதிடர் கண்டு பிடிப்பார்.
ரேகைக்கு விதவிதமான நல்ல பெயர்களும் உண்டு (முக்கமல சங்கு ரேகை என்பது போல) முன் ஜென்மத்தில் செய்த தர்மம் (நல்ல காரியம்) எவ்வளவு, கர்மம் (தீய காரியம்) எவ்வளவு என்பது தெரிவிக்கப்படும். (தர்மம் 9 கர்மம் 1-நல்ல ஜாதகர்).
இதைத் தொடர்ந்து ஜாதகரின் முன் ஜென்மமும் விளக்கப்படும். பின்னர் ஜாதகர் பிறந்த வருடம், ஜாதகம் தெளிவாக சொல்லப்படும்.
பின்னர் பலன்களும் ஆயுள் குறித்த விவரங்களும் வரும். பரிகாரம் தேவையெனில் அவைகளும் கூட விளக்கப்படும்.
ஒரு ஜாதகரின் குண நலன்கள், அவரது வெற்றிகள், தோல்விகள், மனைவி, மக்கள், பதவி, நோய்கள் என அனைத்தையும் அகத்தியரின் சுவடிகள் தெரிவிப்பது பிரமிக்க வைக்கிறது.
இப்படிப்பட்ட அகத்தியரின் நாடி ஜோதிடம் உள்ளிட்டவற்றை ரஷ்யர்கள் மொழிபெயர்த்து ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது.
18 சித்தர்கள் வரலாறு |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |