அகத்தியர் ஆரூடம் – Agathiyar Arudam in Tamil

Advertisement

அகத்தியர் அருளிய ஆரூடம்

ஒரு சுப காரியம் செய்வதற்கு முன் எவ்விதக் குறிப்புகளோ, ஏடுகளோ இல்லாமல் அன்றைய கோள்களின் நிலையை வைத்துச் சொல்வது தான் ஆரூடம்.

அவற்றில் பிரசன்ன ஆரூடம், திசை ஆரூடம், பட்சி ஆரூடம், தெய்வ ஆரூடம், தாம்பூல ஆரூடம், சோழி ஆரூடம், ஏடுவழி ஆரூடம் என்று சில வகைகள் உள்ளன. இதில் அகத்தியர் அருளிய ஆரூட ஜோதிடம் பிரபலமானது. முயற்சி நம்முடையது முடிவு இறையருள்படி அமைவது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுவோருக்கு இச் ஜோதிடம் ஏற்புடையதாகும். நடக்கப் போவதைக் கணித முறையில் முன் கூட்டி அறிவிப்பது தான் இந்த ஆரூடம்.

இந்த ஆரூட முறையில் 64 கட்டங்கள் கொண்ட ஒரு யந்திரம் பயன்படுகிறது. இந்த யந்திரத்தினை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில்கீறிக் கொள்ள வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த யந்திரத்தை பயன் படுத்தவும் சில நிபந்தனைகளும் உண்டு. அதில் மிக முக்கியமானது சூரிய ஒளி இல்லாத சமயத்தில் இதனை பயன்படுத்தி ஆரூடம் பார்க்கக் கூடாது என்பதாகும். இந்த ஆரூட முறையானது அகத்தியர் அருளிய “அகத்தியர் 12000” என்ற நூலில் காணப்படுகிறது.

64 கட்டங்களை கொண்ட இந்த யந்திரம் இல்லாமல் இதனை செயல் படுத்த முடியாது. இந்த யந்திரத்தின் அமைப்பு மிகவும் எளிமையானதாகும். எட்டுக்கு எட்டு அளவிலான சதுரத்தில் 64 கட்டங்களாக பிரிக்கப் பட்ட எளிய அமைப்புடையது. இந்த கட்டங்கள் முழுவதும் எண்களால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கும்.

பெரிதான சிக்கலோ, சிரமமோ இல்லாத எளிய ஆரூட முறை இது. இந்த ஆரூட யந்திரத்தை எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தனக்கும் பார்த்துக் கொள்ளலாம், மற்றவர்களுக்கும் பலன் சொல்லலாம்.

ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரத்தின் மூலமாக உங்களின் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள கீழ்காணும் கட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு எண்ணை தங்களின் இஷ்ட தெய்வத்தினைத் தியானித்து கிளிக் செய்யவும்.

அகத்தியர் ஆரூடம் – Agathiyar Arudam in Tamil:

0௪
04
௨௪
24
௪௩
43
௨0
20
௨௯
29
௬௧
61
௨௭
27
0௨
02
௪௮
48
௧0
10
௧௩
13
௫௯
59
௫௧
51
௧௬
16
0௮
08
௪௫
45
௩௪
34
௩௯
39
௩0
30
௪௧
41
௫௬
56
௫௩
53
௪0
40
௨௩
23
௫0
50
௫௭
57
௫௨
52
௧௭
17
௬௪
64
௫௪
54
௬௩
63
௪௯
49
௨௧
21
௬0
60
௧௧
11
0௧
01
0௬
06
௧௨
12
௫௮
58
௧௯
19
௪௬
46
௩௮
38
௩௨
32
௧௮
18
௫௫
55
௩௧
31
௩௭
37
௪௭
47
௩௫
35
0௭
07
௧௪
14
௪௨
42
௩௩
33
௧௫
15
0௯
09
௩௬
36
0௩
03
௨௬
26
௪௪
44
௨௨
22
௨௮
28
௬௨
62
௨௫
25
0௫
05

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அகத்தியர் நாடி ஜோதிடம்



ஆரூடப் பாடல் 1

ஓங்கார பிரணவத்தி னுதவியாலே
ஓதிடுவே னாரூட உண்மைதன்னை
பாங்காக தொழிலோங்கும் மணமேகூடும்
பாலர்கட்கு ஞானமுடன் கல்வியோங்கும்
நீஙகாத நோய்நீங்கும் பொருளுஞ் சேரும்
நினைந்தயெண்ணம் பலிக்குமயலுதவி தோன்றும்
தீங்கினி நேராது செழித்துவாழ்வாய்
தினமெட்டி லிதின்விபரம் தெரிகுவாயே.

 எண்: 1 விளக்கம்:

ஆரூடத்தில் எண் ஒன்றை கிளிக் செய்தீர்கள் என்றால், உங்களுடைய கவலைகள் அனைத்தும் நீங்கிவிடும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில திருமணம் நடந்துமுடியும். குழந்தைகளுக்கு அறிவு திறன் மேம்படும், நீண்ட நாட்கள் வாட்டி வந்த நோய்கள் குணமாகும், பொருள் சேர்க்கை அதிகமாகும், நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும், இனி பிரச்சனைகள் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள் இந்த ஆரூடம் பார்த்த நாளில் இருந்து எட்டு நாட்களில் இதன் விபரம் அறியமுடியுமாம் என்கிறார்.



ஆரூடப் பாடல் 2

வேலுண்டு வினையகலும் கஷ்டந்தீரும்
விச்சித்ர மயிலுண்டு கவலை போகும்
குழுமே செல்வமது தொழிலுமோங்கும்
ஷண்முகனி னருளாலே நலியும்நீயும்
பாழான கேதுபத்து நாளிலப்பா
பதறாதேயுன்னை விட்டு விலகிப்போவான்
தாழாமல் வாழ்ந்திடுவாய் யதன்பின்னாலே
தள்ளாதே யகஸ்தியனா ருரைத்தவாக்கே.

 எண்: 2 விளக்கம்:

ஆரூடத்தில் இரண்டு வந்தால், முருகப்பெருமானின் கடாட்சத்தால் அனைத்து செயல்களும்எந்த ஒரு தடையும் இல்லாமல் வெற்றிபெறும். மேலும் உங்களுக்கு இருந்த மனக் கவலையும் கஷ்டமும் முருகனின் அருளால் விலகிவிடும். இது அகத்தியர் வாக்கு என்றும் சொல்கிறார்.



ஆரூடப் பாடல் 3

திரிபுரந்தனை யெரித்த தீனநாதன்
திருவருளா லுந்தனுக்கு
பெரியோர் களுதவியுண்டு பெறுவாய்
பெண்டுபிள்ளை குடும்பமுடன் பெருத்துவாழ்வாய்
பரிவான தொழில்முறையி லடைவாய்லாபம்
பாராளும் மன்னர்களால் பெருமையுண்டு
உரித்தான உந்தன்குல தெய்வந்தன்னை
உத்தமனே துதிசெய்தால் உசிதமாமே.

 எண்: 3 விளக்கம்:

ஆரூடத்தில் மூன்று வந்தால், சிவபெருமானின் கருணையினால் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். பெரியோர்களின் உதவிகிடைக்கும். தொழிலில் மற்றும் உத்தியாகத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை பெறுவீர்கள். மேலும் சமுதாயத்தில் மதிக்கப்படுவீர்கள். பலவிதங்களில் மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் குலதெய்வத்தை வணங்கி வர நன்மைகிட்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்வோம்



ஆரூடப் பாடல் 4

அண்டமாகி ரண்டமதை யளந்தமாயன்
அருளாலே யுந்தனுக்கு அதிர்ஷ்டமுண்டு
விண்டிடுவார் புவிதனிலே விவேகியென்று
வேணபொருள் சேரும்புத்ர பாக்கியமுண்டு
கண்டபடி கவனமதை செலுத்திடாதே
கவலையின்றி நினைத்தயெண்ணம் முடியுமப்பா
தொண்டனே பதினொன்று நாளே போனால்
துணைபுரிவார் செங்கமல வண்ணன் தானே.

 எண்: 4 விளக்கம்:

ஆரூடத்தில் நான்கு வந்தால், உங்களுக்கு அதிக அளவு அதிஷ்டம் உண்டாகும். சமுதாயத்தில்  உள்ளவர்கள் உங்களை விவேகி என்று போற்றுவார்கள். பொருள் சேர்க்கை அதிகரிக்கும். புத்திர பாக்கியம் கிட்டும். நீங்கள் செயல்படுத்தும் அனைத்து விஷயங்களையும் கவனமாக செய்ய வேண்டும். மேலும் நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். இந்த ஆரூடத்தை பார்த்த நாளில் இருந்து 11 நாள் சென்றால் செங்கமல வண்ணன் துணையுடன் எல்லாம் சிறப்பாகும் என்கிறார்.



ஆரூடப் பாடல் 5

பட்டதொரு துன்பமெலா மொழிந்துபோச்சு
பாலகனே குருதிசையு முதவியாச்சு
விட்டதொரு தொழிலுனக்கு விர்த்தியாச்சு
வீட்டிலுள்ள கஷ்டமெல்லாம் விலகலாச்சு
முட்டவே எண்ணமெல்லாம் முடிவதாச்சு
மூதோர்கள் பொருள்சேரும் காலமாச்சு
அட்டலக்குமி கடாட்சமது மிகவுண்டாச்சு
அகஸ்தியர் சொல்லணுவளவும் பிசகிடாதே.

 எண்: 5 விளக்கம்:

ஆரூடத்தில் ஐந்து வந்தால், உங்களுக்கு இனி குரு திசை வரப் போவதால் கவலைகளெல்லாம் நீங்கும். கஷ்டத்தில் இருக்கும் தொழில் இனி வளர்ச்சியடையும். உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கும். எண்ணிய கருமங்கள் சிறப்பாக நடந்துமுடியும். பரம்பரை சொத்துக்கல் உங்களை வந்து சேர வாய்ப்பு உள்ளது. அஷ்டலட்சிமி கடாட்சம் உண்டாகும்.



இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எண் கணிதம் ஜோதிடம் அறிவோம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement