அஜித் ராசி நட்சத்திரம்
பொதுவாக குழந்தை பிறந்த நேரத்தை வைத்து ராசி நட்சத்திரத்தை ஜோதிடரை வைத்து கணிப்பார்கள். பெண் குழந்தைகள் பிறந்த நேரம் தெரியவில்லை என்றால் அவர்கள் ருது ஆன நேரத்தை வைத்து ராசி மற்றும் நட்சத்திரத்தை கணிக்கலாம். இந்த ஜாதகத்தை வைத்து தான் நாம் வாழ்வில் நடக்க கூடிய நன்மை மற்றும் தீமைகளை கணிப்பார்கள். எடுத்துக்காட்டாக நம்முடைய ஜாதக கட்டத்தில் என்ன பெயர்ச்சி நடக்கிறது அதனை வைத்து நம்முடைய வாழ்க்கை இப்படியெல்லாம் இருக்க போகிறது என்று கணிப்பார்கள்.
நாம் புதிதாக வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, தொழில் செய்தாலும் சரி அதற்கு முதலில் ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கா என்று பார்த்து விட்டு தான் ஆரம்பிப்போம். இருந்தாலும் பிரபலங்களின் ராசி நட்சத்திரத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் அஜித்தின் ராசி நட்சத்திரத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
அஜித் பிறந்த தேதி:
நடிகர் அஜித் அவர்கள் ஆசை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற இன்னும் பல படங்களில் நடித்தது மூலம் பிரபலமானார். அதன் பிறகு இவரை தல என்றும், அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். இவர் 1.05.1971-ம் ஆண்டு சனிக்கிழமை அன்று ஹைதராபாத்தில் பிறந்தார்.
அஜித் ராசி:
இவர் கடக ராசி, பூச நட்சத்திரம் கொண்டவர். இவர் கடக ராசி என்பதால் பிறந்தது முதல் வசீகர தோற்றம் உடையவராக இருப்பார்.
இவருடைய ஜென்ம நட்சத்திரம் பூசம் என்பதால் இவர் மீது மரியாதை எளிதாக கிடைத்து விடும். இவருடைய தொழிலில் பல தடைகளை கடந்து வந்த பிறகு தான் வெற்றியை அடைந்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்தது. சனியின் பார்வை 7-ம் வீட்டில் இருந்ததால் குழந்தை பேறு தாமதமாக கிடைக்கும். இவருடைய லக்கினத்தில் ராகு மற்றும் செவ்வாய் சேர்ந்ததால் இவருக்கு நடிப்பு இல்லாமல் தனித்திறமை காணப்பட்டது. அது தாங்க கார் ரேஸ்.
குடும்பத்தில் உள்ளவர்களுடன் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர். மேலும் மற்றவர்கள் உதவி கேட்காமலே உதவி செய்யு கூடிய குணம் உடையவர்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |