Akka Kanavil Vanthal Enna Palan
இன்றைய பதிவில் அக்கா கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்க்க போகிறோம். நாம் இரவு தூங்கும் போது கனவு வருவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. இந்த கனவானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அதாவது எல்லாருக்கும் ஒரே மாதிரியான கனவுகள் வருவதில்லை. சில பேருக்கு இறந்தவர்கள் கனவில் வருவார்கள். சில பேருக்கு ஊறுண்ணிகள் கனவில் வரும். இப்படி எந்த மாதிரி கனவுகள் வந்தாலும் அதற்கான பலன்களை பார்க்க செய்வோம்.
ஏனென்றால், நம்முடைய முன்னோர்கள் அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்று கூறுவார்கள். அதனாலயே கனவுகளுக்கான பலன்களை பார்க்க செய்வோம். நாம் காணும் கனவுகள் அனைத்தும் முழுவதும் ஞாபகம் இருக்காது. சில கனவுகள் மட்டும் தான் ஞாபகம் இருக்கும். பொதுவாக கனவுகள் வருவதே நமக்கு வரும் நன்மைகள் மற்றும் தீமைகளை உணர்த்துவதற்காக தான் என்று நமக்கு தெரியும். அந்த வகையில் இன்றைய பதிவில் அக்கா கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க…
உடன் பிறந்த அக்கா கனவில் வந்தால் :
உடன் பிறந்த அக்கா கனவில் வந்தால் உங்களுக்கு நல்லது நடக்கபோகிறது என்பதை உணர்த்துகிறது. உங்கள் உடம்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது விரைவில் குணமாகி ஆரோக்கியமாக இருக்க கூடும் என்பதை உணர்த்துவதை குறிக்கிறது. அதுமட்டுமில்லாமல் உங்களின் பொருளாதார பிரச்சனை நீங்கி உங்கள் வாழ்க்கையில் செல்வ செழிப்பை அதிகரிக்க செய்வதை குடிக்கும்.
தங்கை கனவில் வந்தால்:
உங்கள் கனவில் உடன்பிறந்த தங்கச்சி கனவில் வந்தால், பொதுவாக மகிழ்ச்சியான மற்றும் நல்ல செய்திகளை குறிக்கிறது. மேலும், உங்கள் வாழ்க்கையில் நல்ல செய்திகள் மற்றும் குடும்ப உறவுகளில் முன்னேற்றம் போன்றவற்றை குறிக்கிறது.
அக்கா சண்டை போடுவது போல் கனவு கண்டால் :
உங்கள் அக்கா உங்களிடம் சண்டை போடுவதுபோல் கனவு கண்டால் உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் ஏதேனும் பிரச்சனை வரப்போகிறது என்பதை உணர்த்துகிறது. ஆகையால் நீங்கள் அவர்களிடம் பேசும் போது கவனமாக வார்த்தைகளை பார்த்து பேச வேண்டும்.
அக்கா நம்மைவிட்டு பிரிவது போல் கனவு கண்டால்:
அக்கா நம்மை விட்டு பிரிவது போல் கனவு கண்டால் உங்கள் அக்காவிற்கு திருமணம் ஆகாமல் இருந்தால் விரைவில் திருமணம் ஆகும் என்பதை குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல் வேலை தொடர்பான விஷயங்களுக்காக பயணம் வெளியூர் பயணம் செய்வதையும் குறிக்கிறது.
அக்கா நம்மை விட்டு அழுவது போல் கனவு கண்டால்:
அக்கா அழுவது போல் அல்லது சோகமாக இருப்பது போல் கனவு கண்டால், உங்களை எச்சரிக்கையாக இருப்பதை உணர்த்துகிறது. மேலும், உங்கள் அக்கா வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை வரக் கூடும் என்பதையும் உணர்த்துகிறது. ஆகையால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.
அம்மா கனவில் வந்தால் என்ன பலன்
அக்கா ஆசீர்வதிப்பது போல் கனவு கண்டால்:
உங்கள் கனவில் அக்கா உங்களை ஆசிர்வதிப்பதுபோல் கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் அனைத்துவிதமான நன்மைகளும் வரப்போகிறது என்பதை உணர்த்துகிறது. இது உங்கள் வாழ்க்கையில் வரப்போகும் நன்மையை உணர்த்துவதை குறிக்கிறது.
அக்கா உங்களிடம் பேசுவதுபோல் கனவு கண்டால் :
உங்கள் வாழ்க்கையில் கவனம்செலுத்த வேண்டும் என்பதையும், உங்களின் வாழ்க்கையில் நீங்கள் அக்கறையை செலுத்த வேண்டும் என்பதை குறிக்கிறது. அதேபோல் உங்கள் அக்காவிற்கு பிடிக்காத விஷயங்களை உங்கள் வீட்டில் செய்வதையும் குறிக்கிறது.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |













