அக்கினியில் நடந்து வந்தோம் பாடல் வரிகள்.! | akkiniyil nadanthu vanthom lyrics in tamil

Advertisement

Akkiniyil Nadanthu Vanthom Lyrics in Tamil

நம் துன்பங்கள் அனைத்தும் தீர கடவுளின் பாடல் வரிகளை உச்சரிப்போம். ஒவ்வொரு கடவுளையும் போற்றி ஒவ்வொரு பாடல் வரிகள் உள்ளது. அதனை, நாம் உச்சரிக்கும் போது நம் மனத்திற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது. கடவுளின் அருள் பெற நாம் கடவுளை நினைத்து பல பாடல் வரிகளை தினமும் உச்சரிக்க வேண்டும். எனவே, அப்படி நாம் கிறிஸ்துவ பாடல் வரிகளான அக்கினியில் நடந்து வந்தோம் வாடல் வரிகளை பின்வரும் பதிவில் கொடுத்துள்ளோம். எனவே, இப்பதிவை முழுவதுமாக படித்து யேசுகிறிஸ்துவின் ஆசியை பெறுங்கள்.

சிவபுராணம் பாடல் வரிகள்

அக்கினியில் நடந்து வந்தோம் கிறிஸ்தவ பாடல்:

 அக்கினியில் நடந்து வந்தோம் கிறிஸ்தவ பாடல்

அக்கினியில் நடந்து வந்தோம்
ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பா
தண்ணீரைக் கடந்து வந்தோம்
நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பா

உங்க கிருபை எங்களை விட்டு
இமைப்பொழுதும் விலகலப்பா

எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர்
நாங்கள் போற்றிடும் கன்மலை நீர்

2. செங்கடலை நீர் பிளந்தீர்
செம்மையான பாதை தந்தீர்
எரிகோவின் கோட்டைகளை
உம் யோசனையால் தகர்த்தீர்

சாய்பாபா ஆரத்தி பாடல் வரிகள்

கோலியாத்தின் கோஷங்களை
ஒரு நொடியில் வென்றுவிட்டீர்

3. பலவித சோதனையால்
புடமிடப்பட்டோம் ஐயா
பொன்னாக மாற்றிவிட்டீர்
புது இருதயம் தந்து விட்டீர்

எங்கள் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்து விட்டீர்

4. வருடங்களை உமது
கிருபையினால் கடந்தோம்
இனிவரும் நாட்களெல்லாம்
உந்தன் மகிமைதனைக் காண்போம்

எங்கள் ஆயுள் உள்ளவரை
இயேசு நாமத்தை உயர்த்திடுவோம்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement