இந்த ஆண்டு அட்சய திருதியை எப்போது வருகிறது தெரியுமா? – Akshaya Tritiya 2023 Date and Time
இந்தியாவில் அட்சய திருதியை என்பது ஒரு நல்ல நாளாக கருத்தப்படுகிறது, ஆக இந்த நன்னாளில் நாம் செயல்படுத்தும் அனைத்து வகையான நல்ல செயல்களும் சிறப்பாக நடந்து முடியும். மேலும் இது ஒரு பொன்னான நாள் என்பதால் இந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது அனைவரது நம்பிக்கையாக இருக்கிறது. அட்சய திருதியை என்று அழைக்கப்படும் இந்த நன்னாள் இந்துக்கள் மற்றும் சமணர்கள் கொண்டாடும் புனித நாள் ஆகும். சரி இந்த ஆண்டு அட்சய திருதியை எப்போது வருகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இரு கிரகங்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு இணைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழிய போகிறது..
அட்சய திருதியை எப்போது 2023 – Akshaya Tritiya 2023 Date and Time:
இந்த ஆண்டு அட்சய திருதியை வருகின்ற ஏப்ரல் 22-ஆம் தேதி வருகிறது. இந்த அட்சய திருதியை நாள் எப்படி கணக்கிடப்படுகிறது என்றால் தமிழ் மாதமான சித்திரையில் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறையன்று வரும் திரிதியை நாளை , ‘அட்சயதிரிதியை’ திருநாளாகக் கணக்கிடப்படுகிறது.
இந்த அட்சய திருதியை நன்னாளில் நாம் குண்டுபணியளவிலாவது தங்கை நகை வாங்கினோம் என்றால் நமது வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்று பலரால் நம்பப்படுகிறது. இந்த நாளில் தங்கம் மட்டும் இல்லாமல் ஐஸ்வர்யம் தரக்கூடிய எந்த பொருளை வாங்கினோம் என்றாலும் அவர்கள் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்று நம்பப்படுகிறது.
ஆக அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியின் புகை படம், மகாலட்சுமிக்கு உகந்த பச்சரிசி, உப்பு, வெல்லம், மஞ்சள், குங்குமம் போன்ற பொருட்களை வீட்டில் வாங்கி வைக்கலாம்.
மேலும் இந்த நாளில் என்னென்ன விஷயங்களை செய்யலாம் என்றால் குழந்தைக்கு அன்னப் பிராசனம் செய்வது. சங்கீதம், கல்வி, கலைகள் உள்ளிட்ட பயிற்சிகளில் சேரலாம். மேலும் சுபகாரியங்களை செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கோடீஸ்வர யோகம் பெறப்போகும் ராசி எது..? இந்த சுக்கிரப்பெயர்ச்சி நல்ல காலம் தான்..!
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |














