அட்சய திருதியை எப்போது 2024.. தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரம்..

Advertisement

அட்சய திருதியை எப்போது 2024

அட்சய திருதியை நாள் என்பது மிகவும் மங்களகரமான நாள். இந்நாளில் அனைவரும் பல சுப காரியங்களை செய்வார்கள். பொதுவாக அட்சய திரிதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் நிலைத்து இருக்கும் என்பது அனைவரது நம்பிக்கை. இந்த நாள் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்து கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கு இந்த பதிவு உதவும் வகையில் இருக்கும். இந்த பதிவில் அட்சய திருதியை எப்போது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

அட்சய திருதியை 2024 தேதி மற்றும் நேரம்:

அட்சய திருதியை இந்த ஆண்டு மே மாதம் 10– தேதி வெள்ளிக்கிழமை காலை 4.17 மணிக்கு தொடங்கி மே 11-ம் தேதி 2. 50-க்கு முடிவடைகிறது. ஆனால் வெள்ளிக்கிழமையில் தான் அட்சயதிருதியை கொண்டாடப்பட உள்ளது.

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்

அட்சய திருதியை என்றால் என்ன.?

அட்சய திருதியை என்பது நவகிரகங்களில் தந்தை கிரகமான சூரியனும், தாய் கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலம் என ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது .அதாவது சூரியன் தனது உச்ச ராசியான மேஷ ராசியிலும் சந்திரனின் உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் நாளாகும்.

அட்சய என் என்றால் பூரணமானது, வளர்கிறது,குறைவில்லாதது என்று பொருள். சித்திரை மாதம் வரும் வளர்பிறை திருதியைத் தான் அட்சய திருதி என கொண்டாடுகிறோம். மேலும் இந்நாளில் எந்த ஒரு பொருள் வாங்கினாலும்,எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது மென்மேலும் பெருகி கொண்டே இருக்கும்.

அதனால் தான் இந்நாளில் நல்ல காரியங்களை செய்ய மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு சிலரோ அட்சயதிருதிக்காக கடன் வாங்கியாவது நகை வாங்க வேண்டும் என்று யோசிப்பார்கள் அவ்வாறு செய்தால் கடன் மேலும் பெருகும்.

அட்சய திருதியை வாழ்த்துக்கள் 2024

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement