வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மறந்தும் கூட அட்சய திருதியை அன்று இந்த பொருட்களை மட்டும் தானமாக கொடுத்து விடாதீர்கள்

Updated On: April 29, 2025 3:28 PM
Follow Us:
akshaya tritiya dhanam kodukka koodatha porutkal
---Advertisement---
Advertisement

அட்சய திருதி அன்று  தானமாக கொடுக்க கூடாத பொருட்கள் | Items That Should Not Be Donated on Akshaya Tritiya

அட்சய திருதியை நாள் என்பது மிகவும் மங்களகரமான நாள். இந்நாளில் அனைவரும் பல சுப காரியங்களை செய்வார்கள். பொதுவாக அட்சய திரிதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் நிலைத்து இருக்கும் என்பது அனைவரது நம்பிக்கை. எனவே அந்நாளில் தங்கத்தை வாங்கி வீட்டில் வைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் ஏழைகளுக்கு தங்களால் முடிந்த தானங்களை கூட செய்வார்கள். இந்த தானங்கள் வழங்குவதன் மூலம் நமக்கு புண்ணியமும், செல்வமும் பெருகும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. ஆனால் சில பொருட்களை தானமாக கொடுக்க கூடாது என்றும் ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. அதனை பற்றி காண்போம்.

அட்சய திருதி அன்று  தானம்

அட்சய திருதி அன்று  தானமாக கொடுக்க கூடாத பொருட்கள்

அட்சய திருதியை ஆனது லட்சுமி தேவிக்கு உகந்த நாளாக இருக்கிறது. அதனால் அன்றைய தினம் ஏழைகளுக்கு உங்களால் முடிந்த தானங்கள் வழங்குவதன் மூலம் வீட்டில் செல்வமானது பெருகும். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சில பொருட்களை தானமாக கொடுக்க கூடாது என்று ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படி கொடுத்தால் வீட்டில் உள்ள அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் ஆனது குறைந்து விடும்.

Akshaya Tritiya Dhanam Kodukka Koodatha Porutkal:

 உடைந்த பொருட்களை தானம் செய்ய கூடாது. அப்படி தானம் செய்தால் வீட்டில் நஷ்டம் ஏற்படும். எது செய்தாலும் அதில் வளர்ச்சி இருக்காது. ஆன்மிகத்தில் பால் பொருட்களை தானம் கொடுக்க கூடாது. பால் ஆனது லட்சுமி தேவியின் உருவமாக பார்க்கப்படுகிறது. அதனால் லட்சுமி தேவி வீட்டில் இருந்து போகிவிடும் என்று ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அட்சய திருதி அன்று மாலை நேரத்தில் பணத்தை கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது அப்படி நீங்கள் மலை நேரத்தில் பணத்தை தானமாக கொடுத்தால் உங்கள் வீட்டில் பண நஷ்டம் ஏற்படும். நீங்கள் வாங்கும் வருமானம் ஆனது வீட்டில் தங்காது.  கூர்மையான பொருட்கள் எதையும் தானம் செய்ய கூடாது. அப்படி நீங்கள் ஒருவேளை தானம் செய்தீர்கள் என்றால் குடும்பத்தில் உள்ளவர்களுடன் சண்டை ஏற்படும். முக்கியமாக உங்களுக்கு பிடித்தவர்களுடன் சண்டை ஏற்படும்.  

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. ஆனால், தங்கம் வாங்க முடியாதவர்கள், வேறு ஏதாவது தானம் செய்யலாம். ஏழைகளுக்கு உணவு கொடுக்கலாம். துணிமணிகள் தானம் செய்யலாம். புத்தகம் கொடுக்கலாம். எது கொடுத்தாலும், மனதார கொடுக்க வேண்டும். அட்சய திருதியை அன்று நாம் செய்யும் தானம், நம்முடைய வாழ்க்கையில் சந்தோசத்தை அதிகரிக்கும். அப்படி வேறு என்னென்ன தானம் கொடுக்கலாம் என்று தெரிந்து கொள்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

அட்சய திருதியை அன்று இந்த பொருட்களை தானமாக கொடுத்தால் வீட்டில் செல்வம் பெருகும்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now