அட்சய திருதி அன்று இந்த இரண்டு பொருட்களை கட்டாயம் வாங்குங்கள்

Advertisement

அட்சய திருதி அன்று வாங்க கூடிய இரண்டு பொருட்கள்

அட்சய திருதியை நாள் என்பது மிகவும் மங்களகரமான நாள். இந்நாளில் அனைவரும் பல சுப காரியங்களை செய்வார்கள். பொதுவாக அட்சய திரிதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் நிலைத்து இருக்கும் என்பது அனைவரது நம்பிக்கை. இன்று தான் அட்சய திருதி. இந்த நாளில் கட்டாயம் வாங்க வேண்டிய இரண்டு பொருட்களை பற்றி அறிந்து கொள்வோம்.

அட்சய திருதி அன்று வாங்க வேண்டிய இரண்டு பொருட்கள்:

இந்த ஆண்டில் மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை இன்று கொண்டாடப்படுகிறது. இன்று மாலை 06 மணி துவங்கி, மே 11ம் தேதி காலை 04.56 மணி வரை திரிதியை திதி உள்ளது. மகாலட்சுமிக்கு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் இந்த ஆண்டு அட்சய திரிதியை வந்துள்ளது. இது கூடுதல் சிறப்புடையதாகவும், முக்கியத்துவம் கொண்ட நாளாகவும் இருக்கிறது.

அட்சய திரிதியை இன்றைய நல்ல நாளில் குளித்து விட்டு, சுத்தமான ஆடைகளை உடுத்த வேண்டும். பிறகு கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டின் பூஜை அறையிலோ விளக்கேற்றி வழிபட வேண்டும். பிறகு மகாலட்சுமியையும், பெருமாளையும் வழிபட வேண்டும். அவர்களுக்குரிய மந்திரங்களை சொல்லி பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினம் மகாலட்சுமிக்கு பொங்கல், பால் பாயசம் போன்ற நெய்வேத்தியங்களை படைத்து வழிபாடு செய்யலாம்.

இதில் கட்டாயம் தங்கம் வாங்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஆனால் எல்லாராலும் தங்கம் வாங்க முடியாது. அதனால் தான் இந்த பதிவில் எல்லாரும் வாங்க கூடிய இரண்டு பொருட்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

மகாலட்சுமிக்கு உரிய பொருட்களான உப்பு மற்றும் மஞ்சள்  பொருட்களை வாங்க வேண்டும். இவை இரண்டும் வாங்கி பூஜை செய்து வழிபட்டால் மென்மேலும் நன்மை பயக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

Advertisement