அலைபாயுதே கண்ணா பாடல் வரிகள்..! | Alaipayuthey Kanna Lyrics in Tamil

Advertisement

Alaipayuthey Kanna Song Lyrics in Tamil

பொதுவாக இந்து சாஸ்திரத்தின்படி கடவுள் விஷ்ணு நமது உலகை காக்கும் கடவுள் ஆவார். அதாவது இவர் தான் நமது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் வேலை செய்கிறார். அதாவது இவர்தான் நமது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை நமக்கு காட்டுவார். அதேபோல் இவரது பத்து அவதாரங்களும் இந்த உலகில் உள்ளவர்களுக்கு பல நல்ல கருத்துகளை கூறுகின்றன. அப்படிப்பட்ட பத்து அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதாரம் அனைவருக்குமே பிடிக்கும். அதேபோல் இந்த கிருஷ்ண பகவானின் ஆசீர்வாதத்தையும் அருளையும் பெற வேண்டும் என்று பலரும் சிந்தனை செய்து அவரை வழிபடுவார்கள். ஆனால் அவரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் நாம் பெறவேண்டும் என்றால் நாம் முதலில் அவருக்கு மனமார பூஜை செய்யவேண்டும். அப்படி நாம் பூஜை செய்யும் பொழுது நம்மில் பலரும் அவரை பலவகையான பாடல்களை பாடி பூஜை செய்வோம். அப்படி நம்மில் பலரால் விரும்பி பாடப்படும் பாடல்களில் ஒன்று தான் இந்த அலைபாயுதே கண்ணா பாடல் வரிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம்..

முழுமுதற் கடவுளான விநாயகரின் அஷ்டோதிர வரிகள்

Alaipayuthey Kanna En Manam Song Lyrics in Tamil

Alaipayuthey Kanna En Manam Song Lyrics in Tamil

அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்

அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்

நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று

நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா
என் மனம் (அலைபாயுதே)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா

கிருஷ்ணா பகவானின் என்ன தவம் செய்தனை பாடல் வரிகள்

ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழலெனக்-அளித்தவா
கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழலெனக்-அளித்தவா

கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ

இது தகுமோ, இது முறையோ, இது தருமம் தானோ?
இது தகுமோ, இது முறையோ, இது தருமம் தானோ?

குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள்
போலவே மனது வேதனை மிகவொடு

அலைபாயுதே கண்ணா, என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா……….

ஆயர்பாடி மாளிகையில் பாடல் வரிகள்

அலைபாயுதே கண்ணா பாடல் வரிகள் Pdf 

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 
Advertisement