பணத்திற்கு பஞ்சம் வராமல் இருக்க.. கற்றாழையை இந்த திசையில் வையுங்க..!

Advertisement

கற்றாழை செடியை இந்த திசையில் வைங்க… பணத்திற்கு பஞ்சமே வராது..! Aloe Vera Plant Vastu Benefits

பொதுவாகவே சில வகையான செடிகள் மற்றும் மரங்களுக்கு நேர்மறை ஆற்றல்களினை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக சில தாவரங்களுக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும் என வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. இந்த திசையில் கற்றாழை செடியை நடுவது உங்கள் வீட்டிற்கு நிதிநிலை வளர்ச்சியடைய செய்து பணம் வரவை அதிகரித்து கொண்டு வரும்.

குறிப்பாக சில வகையான தாவரங்களை நமது வீட்டில் குறிப்பிட்ட திசையில் வைத்து வளர்க்கும் போது. நமது பாக்கெட்டுகள் எப்போதும் நோட்டுகளால் நிறைந்திருக்கும் மற்றும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும் என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள். குறிப்பாக நமது வீட்டில் கற்றாழை செடியை ஒரு குறிப்பிட்ட திசையில் வைத்து வளர்க்கும் போது அது நமது வீட்டில் பணம் வரவை அதிகரித்து தரும்.

சரி வாங்க இந்த பதிவில் கற்றாழை செடியை எந்த திசையில் வைத்தால் பணம் வரவு அதிகமாகும் என்பது குறித்த முழுமையான தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எந்த குபேரர் சிலை வீட்டில் இருந்தால் பணம் வரவு அதிகரிக்கும்

கற்றாழை வைக்க சரியான திசை:

கற்றாழை

வீட்டில் எங்கும் செடிகளை நட வேண்டும் என்று பெரும்பாலான நபர்களுக்கு ஆசையாக இருக்கும், ஆனால் உண்மையில், இந்த தாவரங்களை நல்ல நேரடி சூரிய ஒளியில் வைத்தோம் என்றால் நன்றாக வளரும். ஆக வீடு முழுவதும் சூரிய ஒளி விழுமா என்றால் கண்டிப்பாக விழாது ஆக செடிகளை சூரிய ஒளி விழும் இடத்தில் வைத்து வளர்ப்பது தாம் சிறந்தது.

கிழக்கு திசையில் கற்றாழை நடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது, ஏனெனில் சூரியன் கிழக்கில் உதிக்கிறார் மற்றும் அங்கிருந்து வரும் கதிர்கள் நாள் முழுவதும் சக்தியை வழங்குகின்றன.

ஆனால் பணக்காரர்களின் வீடுகளில் இந்த சோற்றுக்கற்றாழை செடியை மேற்கு திசையில் வைத்து வளர்கின்றன. வாஸ்து படி, கற்றாழை செடியை மேற்கு திசையில் நடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

ஆக கற்றாழை செடியை வீட்டின் மேற்கு திசையில் நடுபவர்களுக்கு வீட்டில் பணத் தட்டுப்பாடு இருக்காது. புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்க ஆரம்பிக்கும். பணம் மற்றும் விலையுயர்ந்த நகைகளால் பெட்டகத்தை நிரப்பும் அளவுக்கு பண மழை பொழியும் என்பது ஐதீகம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டில் பணம் வரவு அதிகரிக்க.. மணி பிளான்ட் இருக்கும் மண் தொட்டியில் இந்த ஒரு பொருளை புதைத்து வையுங்கள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement