ஆமை கனவில் வந்தால் என்ன பலன் | Amai Kanavil Kandal Enna Palan
பொதுவாக கனவு கண்டால் எல்லாரும் நல்லது என்று நினைத்த காலங்கள் எல்லாம் மாறி கனவு என்றாலே பயம் என்ற காலம் தற்போது வந்துவிட்டது. ஏனென்றால் நமக்கு வரும் கனவு சாதாரணமாக இருந்தாலும் கூட அதற்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்குமோ என்ற சந்தேகம் தான் அதிகமாக பலருக்கும் வருகிறது.
ஆகையால் இன்று நம்முடைய தூக்கத்தில் ஒரு கனவு வருகிறது என்றால் உடனே அதற்கான பலன்கள் நல்லதா..! கெட்டதா..! என்பதை தான் சிந்திக்கிறார்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் ஆமை கனவில் வந்தால் என்ன பலன் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
ஆமை கனவில் வந்தால் என்ன பலன்:
- ஆமை கனவில் வருவது என்பது கனவு காண்பவரை பொறுத்தே அதற்கான பலன்கள் அமைகிறது. அதாவது ஒரு பெண்ணின் கனவில் ஆமை வந்தால் அது அவளது சிறப்பான எதிர்காலத்தை குறிக்கிறது.
- அதுவே ஒரு ஆணின் கனவில் ஆமை வந்தால் பொருளாதார ரீதியாகவும், தொழில் மற்றும் வியாபாரம் ரீதியாகவும் முன்னேற்றகரமான பலன்கள் வரப்போகிறது என்பதை குறிக்கிறது
ஆமை வீட்டுக்கு வந்தால் நல்லதா கெட்டதா:
ஆமை வீட்டுக்குள் வருவது என்பது ஆன்மீகத்தில் நல்ல செயலை குறிக்கிறது. அதாவது ஆமையின் ஆயுல்கலம் என்பது மிகவும் நீண்ட நாட்களே ஆகும். எனவே ஆமை வீட்டிற்குள் வந்தாலோ அல்லது இருந்தாலோ அது வீட்டில் உள்ளவர்களின் ஆயுளை அதிகரிக்கும் பலனாக கூறப்படுகிறது.
ஆமை புகுந்த வீடு உறுப்படாது என்று சொல்ல காரணம் என்ன?
வீட்டு வாசலில் ஆமை வந்தால்:
வீட்டு வாசலில் ஆமை வந்தால் நமது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி நேர்மறையான ஆற்றலை அளிக்கிறது என்பது பொருள்படும். எனவே வீட்டு வாசலில் ஆமை வந்தால் வீட்டின் நல்லதை குறிக்கிறது.
அளவில் பெரிய ஆமை கனவில் வந்தால் என்ன பலன்:
அளவில் பெரிய ஆமை கனவில் வந்தால் இதுநாள் வரையிலும் உங்களுக்கு இல்லாத அளவில் வருமானமானது அதிகரித்து காணப்படும். மேலும் நிதிநிலை மற்றும் செல்வ வளம் என இவை இரண்டும் அதிகரித்து காணப்படும்.
ஆமையின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா..?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |