வீட்டு வாசலில் ஆமை வந்தால் என்ன பலன் தெரியுமா..?

Advertisement

வீட்டில் ஆமை பலன் என்ன

நண்பர்களுக்கு வணக்கம்..! நாம் வாழும் இவ்வுலகம் என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சியால் மாறி இருந்தாலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். சிலர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எதை செய்தாலும் ஆன்மீக ரீதியாக தான் செய்வார்கள். அப்படி இருக்கையில் அவர்களுக்கு சிறிய விஷயம் கெட்டதாக நடந்தாலும் அதை அபசகுனமாக பார்ப்பார்கள். அப்படி அபசகுனமாக பார்க்கும் விஷயங்களில் ஆமையும் ஓன்று. சரி ஆமை உங்கள் வீட்டு வாசலுக்கு வந்தால் என்ன பலன் என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் வாயிலாக அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

ஆமை கனவில் வந்தால் என்ன பலன்

வீட்டு வாசலில் ஆமை வந்தால் என்ன பலன்:

வீட்டு வாசலில் ஆமை வந்தால் என்ன பலன்

பொதுவாக ஆமை வீட்டிற்குள் வந்தால் அந்த வீடு விளங்காது, உருப்படாது என்று சொல்வார்கள். அது இன்று வரை பின்பற்றி வரும் ஒரு வழக்கம் தான். ஆனால் அதே ஆமை உங்கள் வீட்டு வாசலுக்கு வந்தால் என்ன பலன் என்று உங்களுக்கு தெரியுமா..?

ஆமை என்றாலே துரதிர்ஷ்டவசமானது என்று சொல்வார்கள். ஆனால் ஆமை சிலைகளை வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டத்தை தரக்கூடியது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

அதே ஆமை உங்கள் வீட்டு வாசலுக்கு வந்தால் அது கெட்ட சகுனம் இல்லை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில் உயிருள்ள ஆமையை வீட்டில் வளர்க்கக்கூடாது என்றும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஆமை புகுந்த வீடு உறுப்படாது என்று சொல்ல காரணம் என்ன

ஆனால் ஆமை சிலைகளை நாம் வீட்டில் வைக்கலாம். அது குடும்பத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது.

வாஸ்து தோஷங்கள் உள்ள வீடுகளில் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். அதுபோல பண நெருக்கடிகள், கடன் பிரச்சினை அதிகமாக இருக்கும். அது மாதிரி உள்ள வீடுகளில் ஆமை சிலைகளை வைப்பதனால் வாஸ்து தோஷங்கள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். 

வீட்டில் ஆமை சிலைகளை வைப்பதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் மூலம் செல்வ செழிப்பு ஏற்படும். பணத்தை ஈர்க்கும் சக்தி ஆமை சிலைக்கு உள்ளது. அதனால் ஆமை சிலையை வாங்கி வீட்டில் வைக்கலாம்.

ஆமை சிலை எந்த திசையில் வைக்கலாம்: 

ஆமை சிலை எந்த திசையில் வைக்கலாம்

உலோகத்தினால் செய்யப்பட்ட ஆமை சிலைகளை வீட்டின் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் வைக்கலாம். இதனால் குழந்தைகளின் வாழ்க்கையில் வளர்ச்சி உண்டாகும். கல்வி, சுப காரியங்கள், வேலை போன்ற நற்காரியங்கள் நடைபெறும். நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

ஆமை சிலை எந்த நாளில் வாங்கலாம்: 

நம் வீட்டிற்கு ஆமை சிலைகளை வாங்க நினைத்தால், அதை புதன், வியாழன், வெள்ளி போன்ற வார நாட்களில் வாங்கலாம். சுக்கிர ஹோரை, குரு ஹோரையில் ஆமை சிலைகளை வாங்கினால் இன்னும் நல்லது.

தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement