குருவின் வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது..

Advertisement

குருவின் வக்ர பெயர்ச்சி

பொதுவாக ஒவ்வொரு கிரகங்களும்குறிப்பிட்ட காலத்திற்கு தங்களின் ராசிகளை மாற்றி கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் குரு மங்களகரமானதாக கருதப்படுகிறார். இந்த குரு பகவான் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் செல்வ செழிப்போடு வாழ்வார்கள். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு தற்போது மேஷ ராசியில் பெயர்ச்சி செய்கிறார். அதுவும் செப்டம்பர் 04 ஆம் தேதி முதலாக வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்த வக்ர நிலையில் குரு பகவான் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இருப்பார். குரு வக்ரமாக மாறியிருக்கும் காலத்தில் அமலா ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த அமலா ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி

அமலா ராஜயோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தர போகிறது. உங்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி காணப்படும், மேலும் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் வெற்றியை அடைவீர்கள். நீங்கள் புதிதாக வேலை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தால் அவை உங்களுக்கு சாதகமானதாக அமையும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

சனியின் பெயர்ச்சியால் அடுத்த 2 வருடத்திற்கு நிலையான அதிஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தானா..!

சிம்மம்:

சிம்மம் ராசி

அமலா ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் நன்மையை அள்ளி தர போகிறது. வேலை மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இதனால் வருமானமும் அதிகரிக்கும், சேமிப்பையும் உயர்த்துவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். உங்களின் துணை எல்லா விஷயங்களிலும் பக்க பலமாக இருப்பார்கள்.

மிதுனம்:

மிதுனம்

அமலா ராஜயோகத்தால் மீது ராசிக்காரர்களின் நிதிநிலைமை உயர போகிறது. இது வரை இருந்த பிரச்சனைகள் தீர்விற்கு வரும். உங்களின் வருமானம் அதிகரித்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். எதிர்பாராத வகையில் பண வரவு கிடைக்கும். உங்களி பேச்சு திறமையால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். வெளியூர் பயணங்கள் ஏற்படும்.

சனி பெயர்ச்சி 2023 to 2026 வரை சுருக்கமான பலன்கள்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement