அமாவாசை அன்று குழந்தை பிறந்தால் என்ன ஆகும் தெரியுமா..?

Amavasai Andru Kulanthai Piranthal

அமாவாசை அன்று குழந்தை பிறந்தால்

வணக்கம் அன்பான சகோதர சகோதரிகளே இன்று நாம் அதிக பேருக்கு இருக்கக்கூடிய கேள்விக்கான பதிலாக இந்த பதிவு இருக்கும். பொதுவாக வாரத்தில் 7 நாட்களில்  குழந்தை பிறந்தால் அதற்கேற்று தனி தனி சிறப்பும் குணங்களும் இருக்கும். அதே போல் நிறைய பேருக்கு அமாவாசை அன்று குழந்தை பிறந்தால் அவர்கள் எப்படி பட்டவர்கள் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கும். அதற்கான பதிலாக இந்த பதிவு இருக்கும். வாங்க சுவாரசியமாக படித்து தெரிந்துகொள்வோம்.

Amavasai Andru Kulanthai Piranthal:

அமாவாசை அன்று குழந்தை பிறந்தால் மிகவும் தவறு. அந்த பிள்ளைக்கு நல்ல வாழ்கை அமையாது, அல்லது அந்த பிள்ளை திருடனாகத்தான் இருப்பான். அவன் பிறவியே பாவப்பட்ட ஜென்மம் என்று நிறைய சொல்வார்கள் அதனால் குழப்பங்களுடன் தாய் தந்தை இருப்பார்கள்.

அமாவாசை அன்று குழந்தை பிறந்தால் நல்லதா? கெட்டதா? என்றால் நிச்சயம் நல்லது தான். ஏனென்றால் உங்களுடைய முன் ஜென்மத்துடைய தொடர்பு அல்லது அதற்கும் முன் ஜென்மத்துடைய தொடர்பு அதனுடைய தொடர்புகளில் தான் உங்களுடைய பிறவி வருகிறது. அதாவது உங்களுடைய முன்னோர்கள் முன்றாவது வம்சம்  அல்லது அதற்கு மேல் உள்ளவர்களில் ஒருவரின் ஆசைகள் நிறைவேறாமல் போனதால் அதே வம்சத்தை சேர்ந்தவர்களின் ஒருவராக அமாவாசையில் மறு பிறவி எடுப்பார்கள்.

அமாவாசை என்று குழந்தை பிறந்தால் உங்கள் குடும்பத்தை சேர்த்த ஒருவர் மறு  ஜென்மம் எடுத்திருப்பதாக அர்த்தம்.

இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவர்கள் நினைத்ததை முடிப்பார்கள். அவர்களுக்கு ஆதிகமானது அதிகம் இருக்கும் ஏனென்றால் அவர்கள் அமாவாசையில் பிறந்ததால் அமாவாசை இரவு ராகுவுடைய ஆளுமை அதிகம் காணப்படும். அதனால் அன்று பிறந்த அனைவரும் மிகவும் ஆளுமை திறன்மிக்கவர்கள்.

இதையும் தொடர்ந்து படியுங்கள் பௌர்ணமி அன்று குழந்தை பிறந்தால்

அமாவாசை நஷ்டம் ஏற்படுமா?

அமாவாசை அன்று பிறந்தால் நஷ்டம் ஏற்படும் என்று சொல்வார்கள் அது முற்றிலும் தவறான கருத்து. அமாவாசையில் பிறந்தவர்கள் அப்படி எந்த கஷ்டத்தை அனுபவிக்கமாட்டார்கள்.

இன்னும் சொல்லவேண்டும் என்றால் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை, கண் திஷ்டி, சாபம் போன்ற எதுவும் பலிக்காது அதனால் எந்த பாதிப்பும் அமாவாசையில் பிறப்பவர்களுக்கு இருக்காது.

அமாவாசை இரவு ராகு உடைய ஆதிக்கம் அதிகம் இருப்பதால். அது அவர்களுக்கே மாற்றி நன்மையை தரும் ராகுவே.

ஆரம்பத்தில் கஷ்டம் இருந்தாலும் அவரே அவர்களை உணர ஆரம்பித்தார்கள் என்றால் அந்த கஷ்டத்திலிருந்து விடுபட்டுவருவார்கள்.

அமாவாசையில் பிறந்தவர்கள் கடவுளை அனுக்கிரகத்தை எப்போது அடைகிறார்களோ அந்த நாள் முதல் உங்கள் வாழ்க்கை வளர்ச்சி பாதையில் போகும்.

அமாவாசை திதியில் பிறந்தவர்கள் அதே திதி வரும் போது அவர்களுக்கு பலம் கூடிவிடும். அவர்கள் நினைத்த விஷயத்தை முடிக்க பலம் கூடி விடும். அதே போல் நினைத்த காரியத்தை முடிக்க அதே நாளை முதல் நாளாக எடுத்துக்கொள்ளலாம்.

அவர்களுக்கு என்று தனி சிறப்பு இருக்கிறது. அந்த வம்சத்தில் உள்ள தீர்க்க முடியாத பாவங்கள் அல்லது தோஷங்கள் அனைத்தும் இவர்களால் தீர்க்க முடிவும்.

அமாவாசையில் பிறந்தவர்கள் நிறைய தானம் தர்மம் செய்தால் அவர்களுடைய ஏழு ஏழு ஜென்மம் கர்மா முடிவுபெறும்.

மற்றவர்களுக்கு கிடைத்தாக முக்கிய சக்தி இந்த அமாவாசை பிறவிக்கு இருக்கிறது. மற்றவர்களின் கண்களுக்கு தெரியாத விஷயம் இவர்களின் கண்களுக்கு தென்படும் அல்லது உணர முடியும் அந்த அற்புதமான சக்தி இந்த அமாவாசையில் பிறந்தவர்களுக்கு உண்டு.

அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு அடுத்தவர்களின் மனதில் உள்ளதை கண்டு பிடிக்க கூடி சக்தி அல்லது ஆவிகளிடம் பேசும் சக்தி என இதுபோன்ற விசித்திர சக்தி பெறமுடியும்.

அதுபோல் பின்பு நடக்க இருக்கும் விஷயத்தை அறியமுடியும் அதனை மாற்றி அமைக்க முடியும்.

இதுவே அமாவாசையில் பிறப்பவர்களுக்கு நடக்கும் விஷயம் அமாவாசையில் பிறப்பவர்களுக்கு எந்த கஷ்ட நஷ்டம் ஏற்படாது அதனால் எந்த பிரச்சனையும் இருக்காது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்