Amavasai Tharpanam Mantra in Tamil
ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அமாவாசை அன்று சொல்லக்கூடிய தர்ப்பணம் மந்திரம் பற்றி கொடுத்துள்ளோம். பொதுவாக அமாவாசை அன்று, முன்னோர்களை வழிபடுவது வழக்கம். இறந்த நம் முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாள் தான் அமாவாசை. மாதம் மாதம் அமாவாசை வாரும். இருந்தாலும், ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
எனவே, அன்றைய தினம் நீர் நிலைகளில் இறந்த முன்னோர்களை தர்ப்பணம் கொடுத்து அதன் பிறகு வீட்டிற்கு வந்து, முன்னோர்களின் படத்திற்கு படையல் இட்டு வழிபாடு செய்து, அதன் பிறகு காகத்திற்கு சாதம் வைத்து நாம் சாப்பிட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் முன்னோர்களை மகிழ்விக்கும் விஷயங்களை மட்டுமே சொல்ல வேண்டும். அவற்றில் மந்திரம் கூறுவது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
Thai Amavasai Tharpanam Manthiram:

அமாவாசை தினத்தன்று சொல்லவேண்டிய மந்திரம்:
ஏ ஷாம் ந மாதா ந பிதா ந ப்ராதா ந சபாந்தவஹா
தே சர்வே த்ருப்திம் ஆயாந்து மயா
உஸ்ரீஷ்டைஹி குஸௌதஹைஹி
த்ருப்யத் த்ருப்யத் த்ருப்யத்
ஒவ்வொரு அமாவாசை அன்றும் இந்த மந்திரத்தை, தவறாமல் கூற வேண்டும். வீட்டில் முன்னோர்களின் படத்திற்கு முன்னால் விளக்கேற்றி இந்த மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும். மேலும், பித்ரு 108 போற்றி சொல்வது மிகவும் அவசியம். பித்ரு 108 போற்றி பற்றி தெரிந்துகொள்ள பின்வருமாறு கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
தர்ப்பணம் சங்கல்பம்:
ஓம்! பூமேவிடும் பரதகண்டம் மேருவின் தென்பால்
தேவரும் விரும்பும் புண்ணிய நாட்டில் பொலிவுறு
எந்தன் வீட்டில் பித்ருக்கள் தெய்வங்கள் எழுந்து
ஆஷாட மாதத்து பூச விண்மின் நிலவும் நாளில்
தர்ப்பணம் செய்வதை ஏற்க குறிக்கோள் பகர்ந்திட்டேன்’
என்று கூறி சங்கல்பிக்க வேண்டும். அதன் பிறகு,
`தேவர்களே, பித்ருக்களே, மகரிஷிகளே தர்ப்பையில் அமர்ந்திடுக’ என்று கூறி மூன்று முறை எள் விட வேண்டும். பின்னர்,
`தேவர்களே உங்களுக்குத் தர்ப்பணம் விடுகிறேன்
பிரம்மனே உமக்குத் தர்ப்பணம் விடுகிறேன்
மகரிஷிகளே உங்களுக்குத் தர்ப்பணம் விடுகிறேன்’ என்று மூன்று முறை கூறி விறல் நுனியால் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
அமாவாசை நாளில் மறவாமல் இறந்த நம் முன்னோர்கள் அனைவரையும் நினைத்து வழிபட வேண்டும். அவர்களின் ஆசியை முழுமையாக பெறுவோம்.
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |










