ஆடி அம்மாவாசை விரதம் யாரெல்லாம் இருக்கலாம் | பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாமா
மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் கூட சொல் அமாவாசைகள் சிறப்பு பெற்றது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை சிறப்பு பெற்றது. இந்த நாளில் இறந்தவர்களுக்காக விரமிருந்து தர்ப்பணம் செய்வார்கள். இப்படி நாம் தர்ப்பணம் கொடுக்கும் போது நம்முடைய பாவங்கள், அவர்களின் சாபங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. ஆக இந்த விரதத்தை யாரெல்லாம் இருக்க வேண்டும், யாரெல்லாம் விரதமிருக்க கூடாது என்று அறிந்து கொள்வோம்.
அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்:
அமாவாசை விரதம் எல்லாரும் இருக்க கூடாது. தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த ஆண்கள் அமாவாசை விரதமிருக்க வேண்டும். கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன் ஆடி அமாவாசை விரதமிருக்கவேண்டும்.
ஆனால் கணவன் உயிருடன் இருக்கும் போது தனது இறந்து போன அப்பா, அம்மாவுக்காக பெண்கள் விரதமிருக்க கூடாது. உங்களுடைய கணவர் இறந்தால் மட்டுமே பெற்றோர்களுக்காக விரதமிருக்க வேண்டும்.
திருமண பெண்கள் பெற்றோர்களுக்காக என்ன செய்யலாம்:
திருமணமான பெண்கள் தனது பெற்றோர்களுக்காக விரதமிருக்க முடியாது, தர்ப்பணம் கொடுக்க கூடாது. அவர்கள் அமாவாசை நாளில் தானம் கொடுக்கலாம். உங்களால் முடிந்தவர்களுக்கு அன்னதானம் வழங்குங்கள். மறந்தும் கூட விரதமும் இருக்க கூடாது, தர்பணமும் கொடுக்க கூடாது. அந்த பெண்ணின் பெற்றோர்களுக்காக அவர்களின் சகோதாரர்கள் தான் விரதமிருக்க வேண்டும்.
மகன் இல்லையென்றால் யார் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்:
இறந்தவர்களுக்கு மகன் இல்லை , மகள் இருக்கிறார் என்றால் அவர்களின் மருமகன் விரதமிருக்கலாம். ஒருவேளை இறந்தவர்களுக்கு பிள்ளைகளே இல்லையென்றால் சகோதரர்கள் அல்லது உறவினர்கள் தர்ப்பணம் கொடுக்கலாம்.
ஒருவேளை திருமணம் அகதியாக பெண்களாக இருந்தால் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்காமல், பெற்றோர்களுக்கு படையலிட்டு, தானம் தர்மம் வழங்கி வழிபாடு செய்யலாம்.
பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா:
ஒரு பெண்ணிற்கு திருமணமாகி கணவர் இறந்து, பிள்ளைகள் யாருமில்லை என்றால் கணவருக்காக தர்ப்பணம் கொடுக்கலாம்.
இறந்தவருக்கு மனைவி, பிள்ளை இல்லையென்றால் அவர்களின் சகோதரர் விரதமிருக்கலாம்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |













