Ange idi Mulanguthu Song Lyrics in Tamil
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்ததாக இருக்கிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக இருக்கும், புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாக இருக்கிறது. கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு உகந்த மாதமாக இருக்கிறது. அது போல கடவுளுக்கு உகந்த பாடல்களையும் காலை மற்றும் மாலை நேரத்தில் கேட்பார்கள். சில பேர் தாமே பாடல்களை பாடுவார்கள். இந்த பதிவில் அங்கே இடி முழங்குது கருப்பசாமி பாடல் வரிகளை அறிந்து கொள்வோம்.
அங்கே இடி முழங்குது கருப்பசாமி பாடல் வரிகள்:
அங்கே இடி முழங்குது – கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
அங்கே இடி முழங்குது – கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
அங்கே இடி முழங்குது – மகாலிங்கம்
மாளிக பாறை கருப்பசாமி தங்க கலசம் மின்னுது
வெள்ள நல்ல குதிர மேலே
வீச்சருவா கையிலேந்தி
வேட்டையாட வாரார் அங்கே கோட்ட கருப்பசாமி
அங்கே இடி முழங்குது – கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
மலையாம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி…..
மலையாம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி…..
சிலையாக நிக்கிறாரே தெய்வமான கருப்பசாமி
அங்கே இடி முழங்குது – கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
கருத்த முத்து எண்ணெ போல வடிவழகன் கருப்பசாமி….
கருத்த முத்து எண்ணெ போல வடிவழகன் கருப்பசாமி….
செவத்த துண்டு தலையில் கட்டி தேடி வேட்டை யாடி வாரார். (2)
அங்கே இடி முழங்குது – கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன்
அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்
தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன்
அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்
கோன நல்ல கொண்ட போட்டு
கோத்த முத்து பல்லழகன்….
கோன நல்ல கொண்ட போட்டு கோத்த முத்து பல்லழகன்
கொடிய வேட்டை யாடியல்லோ வாரார் அங்கே கருப்பசாமி…
அங்கே இடி முழங்குது – கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
அங்கே இடி முழங்குது – கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal |