Anjumalai Azhagaa Ayyappan Padal Varigal In Tamil
இன்றைய பதிவில் அஞ்சு மலை அழகா ஐயப்பன் பாடல் வரிகள் பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக, முற்காலத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு கடவுளையும் போற்றி வழிபடும் வகையில் பல்வேறு வகையான பக்தி பாடல்களை எழுதி வணங்கி உள்ளார்கள். அவ்வாறு அவர்கள் இயற்றிய ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு கடவுளின் சிறப்பும் இருக்கும்.ஐயன் ஐயப்பனுக்கு பல்வேறு சிறப்பு பெயர்களும் உள்ளது. மணிகண்டன், பூதநாதன், பூலோகநாதன்தர், மசாஸ்தாஎருமேலிவாசன், அரிகரசுதன், அரிகரன், கலியுகவரதன்கருணாசாகர் மற்றும் லட்சுமண பிராணதத்தா இதுபோன்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
மேலும் கார்த்திகை மாதமே வந்தாலே ஐயப்பன் கடவுளுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்கு செல்வார்கள். ஒவ்வொரு ஐயப்பன் பக்தரும் கார்த்திகை மாத தொடக்கத்தில் ஐயப்பனுக்கு மாலை போட்டு 1 மண்டலம் விரதம் இருந்து மார்கழி மாத கடைசியில் சபரிமலைக்கு செல்வார்கள். இவர்கள் விரதம் இருக்கும் ஒவ்வொரு நாளும் மிகவும் சுத்தமாக இருப்பார்கள்.அந்த வகையில் இந்த பதிவில் அஞ்சு மலை அழகா ஐயப்பன் பாடல் வரிகள்பற்றி பார்க்கலாம் வாங்க….
அஞ்சு மலை அழகா ஐயப்பன் பாடல் வரிகள்:

அஞ்சு மலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா
எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிடமா
மால போட்டு மன பாரம் போனதய்யா
காவி போட்டு கன காமம் பறந்ததய்யா
காரணம் நீ இல்லயா
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைகிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிக்கட்டு சபரிமலைகிண்ணு
நோன்போடு நாமிருந்தோம் நோயொடிப் போனதய்யா
( சாமி சரணம் ஐயப்ப சரணம் தேவன் சரணம் தேவி சரணம் )
நோன்போடு நாமிருந்தோம் நோயொடிப் போனதய்யா
சூடம் கொழுத்தி வச்சோம் சூது மறஞ்சத்தய்யா
சந்தனம் பூசிக்கிட்டோம், சாந்தி கிடைச்சதய்யா
பன்னீர் தெளிச்சிகிட்டோம் பக்தி வளைந்ததய்யா
பாராளும் ராசாவே சத்தியம் நித்தியம் நீயே
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைகிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிக்கட்டு சபரிமலைகிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைகிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிக்கட்டு சபரிமலைகிண்ணு
அஞ்சு மலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா
எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிடமா
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைகிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிக்கட்டு சபரிமலைகிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைகிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிக்கட்டு சபரிமலைகிண்ணு
பம்பா நதி குளிச்சோம் பாவம் தொலைஞ்சத்தய்யா
( சாமி சரணம் ஐயப்ப சரணம் தேவன் சரணம் தேவி சரணம் )
பம்பா நதி குளிச்சோம் பாவம் தொலைஞ்சத்தய்யா
நீலி மலை அடைஞ்சோம் நிம்மதி வந்ததய்யா
சாமி உன் சன்னதியில் சஞ்சலம் தீர்ந்ததய்யா
ஜோதி தரிசனத்தில் ஆவி குவிந்ததய்யா
பாராளும் ராசாவே சத்தியம் நித்தியம் நீயே
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைகிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிக்கட்டு சபரிமலைகிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைகிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிக்கட்டு சபரிமலைகிண்ணு-சாமி
அஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா
எங்க நெஞ்சில் அழகா வந்து தங்கிடமா
மால போட்டு மன பாரம் போனதய்யா
காவி போட்டு கன காமம் பறந்ததய்யா
காரணம் நீ இல்லயா
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைகிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிக்கட்டு சபரிமலைகிண்ணு
கட்டும் கட்டு பள்ளிக்கட்டு சபரிமலைகிண்ணு
இருமுடிக்கட்டு பெருமுடிக்கட்டு சபரிமலைகிண்ணு
அஞ்சுமலை அழகா……..சுவாமியே சரணம் ஐயப்பா…
எங்கே ஓடுது எங்கே ஓடுது ஐயப்பன் பாடல் வரிகள்..! | Enge Oduthu Song Lyrics in Tamil
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |