அன்னாபிஷேகம் 2024 எப்போது.? தேதி மற்றும் நேரம் இதோ.!

Advertisement

Annabhishekam 2024 Date in Tamil | அன்னாபிஷேகம் 2024 தேதி

ஆன்மீக வாசகர்களுக்கு வணக்கம். இப்பதிவில் ஐப்பசி மாதம் நடைபெறும் அன்னாபிஷேகம் எப்போது 2024.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஐப்பசி மதம் வந்தாலே பக்தர்கள் எதிர்பார்ப்பது கந்தசஷ்டி கவசம், மற்றொன்று அன்னாபிஷேகம். ஐப்பசி மாத பெளர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும். இதனை தான் அன்னாபிஷேகம் என்று கூறுவார்கள். சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வதினால் நம்முடைய வாழ்வும் தொழிலும் விவசாயமும் செழிக்கும்.

சிவபெருமானுக்கு வழக்கமாக 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்படும். ஆனால், வருடத்திற்கு ஒரு முறை செய்யப்படும், ஐப்பசி மாத பெளர்ணமியில் அன்னாபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வதை பார்த்தால், கோடி சிவலிங்கத்தை தரிசித்த பலன் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், சொர்க்கம் நிச்சயம். எனவே, இதனை நன்மைகள் அளிக்கக்கூடிய அன்னாபிஷேகம் இந்த ஆண்டு எப்போது வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா.? வாருங்கள் Annabhishekam 2024 Date in Tamil பற்றி பார்க்கலாம்.

ஓம் நம சிவாய மந்திரம் மற்றும் சிவனின் 108 போற்றி..!

அன்னாபிஷேகம் 2024 தேதி மற்றும் நேரம்:

அன்னாபிஷேகம் 2024 தேதி

  •  இந்த ஆண்டு 2024 அன்னாபிஷேகம் ஐப்பசி 29 ஆம் தேதி (நவம்பர் 15 ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. ஐப்பசி மாத பெளர்ணமியில் தான் சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும். இதுவே ஐப்பசி மாதத்தின் கடைசி நாளும் கூட, மறுநாள் கார்த்திகை மாதம் பிறக்கிறது.  
  • நவம்பர் 15 ஆம் தேதி அன்று, அதிகாலை 03.53 AM மணிக்கு பெளர்ணமி திதி துவங்கி, மறுநாள் நவம்பர் 16 ஆம் தேதி அதிகாலை 03.42 AM பெளர்ணமி திதி முடிவடைகிறது.
  • அன்றைய தினம் அனைத்து சிவன் கோவில்களிலும், சிவ பெருமானின் லிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வார்கள். அன்னாபிஷேகத்தை தரிசிப்பது மிகவும் புண்ணியம் ஆகும்.
  • ஆனால், திருவண்ணாமலையில் மட்டும், அஸ்வினி நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு நவம்பர் 14 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. பெளர்ணமி திதியை அடிப்படையாக கொண்ட கோவில்களில் நவம்பர் 15 ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறும்.
  • எனவே, அருகில் உள்ள சிவன் கோவில்களில் நடக்கும் அன்னாபிஷேக நிகழ்ச்சியில் பங்கு கொண்டு, சிவனின் அருளை பெறுங்கள்.
  • அதுமட்டுமில்லாமல், வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடுபவர்கள், வீட்டில் அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை வீட்டில் உள்ளவர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement