அன்னாபிஷேகம் சிறப்பு
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அன்னாபிஷேகத்தின் சிறப்புகள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். சிவபெருமான் அபிஷேக பிரியர். ஆகையால், தினமும் சிவன் கோவில்களில் 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்தது அன்னாபிஷேகம்.
அன்னம் எப்படியோ எண்ணமும் அப்படியே என்று கூறுவார்கள். ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதை வைத்தே அவனது மனதும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட அன்னத்தை கொஞ்சம் கூட வீணடிக்கக்கூடாது என்பதற்காகவும், அன்னத்தின் தெய்வீக தன்மையை எடுத்துரைக்கும் வகையிலுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பு:
- நமது பேரண்டம் நிலம்,நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்னும் பஞ்சபூதங்களால் ஆனது. நமது உடலுக்கும் பஞ்சபூதங்களும் தலைவன் சிவபெருமான். பஞ்சபூதங்களை ஒழுங்கான முறையில், செயல்பட வைத்து, அணைத்து உயிரினங்களுக்கும் தேவையான உணவை அளிக்கும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், எக்காலத்திலும், உணவு பஞ்சம் வராமல் இருக்கவும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
- அன்னம் என்பது பஞ்சப்பூதத்தினால் ஆனது. நிலத்தில் நெல் விதைக்கப்பட்டு, ஆகாயத்தில் பெய்யும் மழை நீரினால் வளர்ந்து காற்றினால் கதிர்பிடித்து சூரியனின் வெப்பத்தினால் பால் இறுகி விளைச்சலை தருகிறது. பஞ்சபூதத்தினால் முக்கியமான அன்னத்தால் சிவனிற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
- ஐப்பசி பெளர்ணமியில் சிவலிங்க திருமேனியில் சாற்றப்படும் அன்னத்தின் ஒவ்வொரு பருக்கையும் சிவனின் அம்சம் வாய்ந்தது. அதாவது ஒவ்வொரு பருக்கையும் சிவரூபமாகும்.
- அன்னாபிஷேகத்தை தரிசிப்பதால் கோடி சிவலிங்கத்தை தரிசித்த பலன்கள் கிடைக்கும். இதனால், தான் துலா மாதமான ஐப்பசி பெளர்ணமி அன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
- ஐப்பசி பெளர்ணமியானது, அஸ்வினி நட்சத்திரத்தில் வரக்கூடியது. அன்னம் என்ற ஒன்றே போதும் என்ற நிறைவை தரக்கூடியது. அன்னமே போதும், என்று இறைவனின் திருவடிகளை சரணடைவதே மனித வாழ்க்கையின் நோக்கம் என்பதை உணர்த்தும் விதமாக சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
- சிவபெருமானுக்கு ஐப்பசி பெளர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிப்படுவதால், உலகம் முழுவதும் சுபிட்ஷமாக இருக்கும் என்று சிவாகமம் கூறுகிறது. சிவன் என்பவர் பரம்பொருள். அவனது பிரதி பிம்பமே அனைத்து ஜீவ ராசிகளும்.
- சிவபெருமானின் சிவலிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதற்கு ஒரு வரலாற்று காரணமும் உள்ளது. அதனை பற்றி தெரிந்துகொள்ள பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.!
அன்னாபிஷேகம் என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |