அன்னாபிஷேகம் செய்வது எப்படி.?

Advertisement

அன்னாபிஷேகம் செய்யும் முறை | Annabishekam Seivathu Eppadi

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அன்னாபிஷேகம் செய்யும் முறை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து முழு ஒளியையும் பூமியில் ஒளிரச்செய்யும் நாள் ஐப்பசி பெளர்ணமி ஆகும். இன்று தான் சந்திரன் தன் சாபம் அனைத்தும் நீங்கி முழு பிரகாசத்துடன் இருப்பார். இந்நாளில் தான் அணைத்து சிவன் கோவில்களிலும் சிவலிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும்.

மற்ற அபிஷேகங்களை விட அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். நவகிரகங்களில் ஒன்றான சந்திர பகவானுக்கு உரிய தானியம் அரிசி. சிவபெருமான் சந்திரனின் சாபம் அனைத்தையும் போக்கி அவருக்கு முழு கலைகளையும் அளித்தார். எனவே, ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி பெர்ணமியில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை காண்பது கோடி புண்ணியம். இந்த ஆண்டு, அன்னாபிஷேகம் நவம்பர் 15 ஆம் தேதியன்று வருகிறது. எனவே, அன்றைய தினம் அன்னாபிஷேகம் செய்வது எப்படி.? என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

அன்னாபிஷேகம் 2024 எப்போது.? தேதி மற்றும் நேரம் இதோ.!

அன்னாபிஷேகம் செய்வது எப்படி.?

அன்னாபிஷேகம் செய்யும் முறை

  • முதலில் ஐந்து வகையான பொருட்கள் கொண்டு சிவ லங்க திருமேனிக்கு அபிஷேகம் செய்வார்கள்.
  • அடுத்து, சமைத்த அரிசியை நன்கு வடித்து, ஆறவைத்து அந்த சாதத்தினை கொண்டு, சிவலிங்க திருமேனி முழுவதும் மறைத்து, அதன் மேல் அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறிகள் மற்றும் பழ வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்வார்கள்.
  • சிவலிங்க திருமேனியின் மேலிருந்து கீழாக அன்னத்தை வைத்து கொண்டு வருவார்கள். இந்த அபிஷேகம் கிட்டத்தட்ட ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் வரை அப்படியே வைக்கப்படும். இந்நேரத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் போன்ற மந்திரங்களை  பாராயணம் செய்வார்கள்.
  • நாழிகை நேரம் முடித்த பிறகு, சிவலிங்க திருமேனியில் இருக்கும் அன்னத்தை அகற்றி விட்டு ஐந்து வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.
  • அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை எடுத்துக்கொண்டு கோவில் குளத்திலோ அல்லது ஆற்றிலோ கரைப்பார்கள். நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு அளிக்கும் விதமாக இப்படி செய்வார்கள். பிரும்ம பாகத்தில் சாற்றப்பட்ட சாதம் மனிதர்களுக்கு அளிக்கப்படுகிறது.
  • இந்த பிரசாதத்தையுண்டால் நோய் நொடி என்பது இருக்காது. குழந்தை பாக்கியம் கிட்டும்.

அன்னாபிஷேகம் என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement