அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா பாடல் வரிகள்..! | Annadhana Prabhuve Song Lyrics in Tamil

Advertisement

Annadhana Prabhuve Song Lyrics in Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இப்பதிவில் இந்து கடவுள்களில் ஒருவராக திகழும், ஐயப்பன் சுவாமியின் பாடல்களில் ஒன்றான அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா பாடல் வரிகளை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க. பொதுவாக,  முற்காலத்தில் உள்ளவர்கள் ஒவ்வொரு கடவுளையும் போற்றி  வழிபடும் வகையில் பல்வேறு வகையான பக்தி பாடல்களை எழுதி வணங்கி உள்ளார்கள். அவ்வாறு அவர்கள் இயற்றிய ஒவ்வொரு பாடலிலும், ஒவ்வொரு கடவுளின் சிறப்பும் இருக்கும். அந்த வகையில் ஐய்யன் ஐயப்பனின் ஐயப்பன் சுவாமியின் பாடல்களில் ஒன்றான அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா பாடல் வரிகளை உச்சரிக்கலாம் வாங்க.

ஐயன் ஐயப்பனுக்கு பல்வேறு சிறப்பு பெயர்களும் உள்ளது.  மணிகண்டன், பூதநாதன், பூலோகநாதன்தர், மசாஸ்தாஎருமேலிவாசன், அரிகரசுதன், அரிகரன், கலியுகவரதன்கருணாசாகர் மற்றும் லட்சுமண பிராணதத்தா இதுபோன்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

எங்கே ஓடுது எங்கே ஓடுது ஐயப்பன் பாடல் வரிகள்..

அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா பாடல் வரிகள்..!

அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா பாடல் வரிகள்

 

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா

பொன்னடியைப் பணிந்து நின்றோம் சரணம் ஐயப்பா
கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (4)

வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா
வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா

இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா
பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (4)

எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா
ஏழை பங்காள‌னே சரணம் பொன்னய்யப்பா

அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை
பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (4)

சபரிமலை ஐயப்பனின் கட்டோட கட்டுமுடி பாடல் வரிகள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement