அண்ணன் கனவில் வந்தால் என்ன பலன்
இரவு தூங்கும் போது கனவு வருவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. இந்த கனவானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அதாவது எல்லாருக்கும் ஒரே மாதிரியான கனவுகள் வருவதில்லை. சில பேருக்கு மனிதர்கள் கனவில் வருவார்கள். சில பேருக்கு விலங்குகள் கனவில் வரும். இப்படி எந்த மாதிரி கனவுகள் வந்தாலும் அதற்கான பலன்களை பார்க்க செய்வோம்.
ஏனென்றால் நம்முடைய முன்னோர்கள் அதிகாலையில் கண்ட கனவு பலிக்கும் என்று கூறுவார்கள். அதனாலயே கனவுகளுக்கான பலன்களை பார்க்க செய்வோம். இந்த கனவுகள் முழுவதும் ஞாபகம் இருக்காது. சிலவை மட்டும் தான் ஞாபகம் இருக்கும். பொதுவாக கனவுகள் வருவதே நமக்கு வரும் நன்மைகள் மற்றும் தீமைகளை உணர்த்துவதற்காக தான். அந்த வகையில் அண்ணன் கனவில் வந்தால் என்ன பலன் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
அண்ணன் கனவில் வந்தால் என்ன பலன்:
நீங்கள் அண்ணனை கனவில் கண்டால் உங்களுக்கு ஏதும் நிறைவேறாத ஆசைகள் இருந்தால் அவை நிறைவேறும். உங்களின் வளர்ச்சியை கண்டு மற்றவர்கள் பொறாமை அடைகிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது. அதுமட்டுமில்லாமல் உங்களின் மீது அதிக அன்பு உள்ளது போல நடிப்பார்கள்.
தம்பி கனவில் வந்தால்:
நீங்கள் எந்த தம்பியை கனவில் காண்கிறீர்களோ அவர்கள் மீது அக்கறை மற்றும் அன்பும் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
மூத்த அண்ணன் கனவில் வந்தால்:
மூத்த அண்ணன் கனவில் வந்தால் உங்களுக்கு ஆதரவாக யாரும் இருக்க மாட்டாரா என்று ஏங்குகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது.
கனவில் உறவினர்கள் வந்தால் என்ன பலன் தெரியுமா
அண்ணனுடன் பேசி கொண்டிருப்பது போல கனவு வந்தால்:
யார் அண்ணனுடன் பேசி கொண்டிருப்பது போல கனவு கான்கீறிர்களோஅவர்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருப்பார்கள் என்பதை இந்த கனவு உணர்த்துகிறது.
அண்ணன் மனைவி கனவில் வந்தால்:
அண்ணன் மனைவி கனவு கண்டால் யார் இந்த கனவு காண்கிறார்களோ அவர்களுக்கும் உறவினர்களுக்கும் பிரச்சனை வர போகிறது என்பதை உணர்த்துகிறது. அதனால் உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |