அண்ணன் தம்பி ஒரே நாளில் திருமணம் செய்யலாமா.!
பொதுவாக சொந்தமாக நிலம் என்று இருந்தால் அதில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஏனென்றால் சொந்தமாக வீடு கட்டுவது என்பது பலரும் கனவாக இருக்கிறது. இந்த நிலமானது நாம் சம்பாதித்து வாங்க கூடியதாக இருக்கும். மற்றொன்று நம்முடைய முன்னோர்களுடைய சொத்துக்கள் இருக்கும். இப்படி முன்னோர்களின் சொத்துக்கள் இருக்கும் போது நிறைய பிரச்சனைகள் வரும். நிலபாகப்பிரிவினை செய்யும் போது பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அப்படி முன்னோர்களின் நிலங்கள் ஏதும் இருப்பின் சொந்தமாக வீடு இல்லை என்றால் அதில் வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். இதில் அண்ணன் தம்பி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அந்த ஒரே நிலத்தில் வீடு கட்டலாமா என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
அண்ணன் தம்பி ஒரே நிலத்தில் இடத்தில் வீடு கட்டலாமா:
அண்ணன் தம்பி ஒரே இடத்தில் வீடு கட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இப்படி நீங்கள் ஒரே நிலத்தில் வீடு கட்டினால் ஒருவர் நன்றாக இருப்பார், மற்றொருவர் வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டப்படுபவராக இருப்பார்கள்.
அண்ணன் தம்பி மட்டுமில்லை எந்த உறவாக இருந்தாலும் சரி கொஞ்சம் தள்ளியே இருப்பது நல்லது. பக்கத்திலே இருந்தால் நிறைய வருத்தங்கள் வரும். அதனால் கொஞ்சம் தள்ளியே இருங்கள், அப்போது அந்த உறவில் நல்லுறவை பராமரிக்க முடியும்.
ஒரே இடத்தில் நீங்கள் வீடு கட்டி இருந்தால் அவர்கள் ஒற்றுமையாக இருக்க முடியாது. இரு வீட்டாரிடம் சண்டை வந்து பிரிந்து காணப்படுவார்கள். இதனை படிக்கும் போது உண்மையாக இருக்கிறதா என்று தோணுகிறதா.!
வீடு கட்டும் போது கவனிக்க வேண்டியவை
ஒரே நிலத்தில் வீடு கட்டினால் இருவரும் நல்லுறவை பராமரிக்க முடியாது, அதனால் கொஞ்சம் தள்ளியே வீடை கட்டுங்கள். அது போல ஒரே மனையில் அண்ணன் தம்பிக்கு திருமணம் செய்யலாமா என்ற சந்தேகம் இருக்கும். அதற்கான விடையை பற்றி அறிந்து கொள்வோம்.
அண்ணன் தம்பி ஒரே நாளில் திருமணம் செய்யலாமா
ஒரே மனையிலோ அல்லது ஒரே நாளிலோ திருமணம் செய்ய கூடாது. இவை அண்ணன் தம்பிக்கு மட்டுமில்லை, அக்கா தங்கையும் ஒரே மேடையிலோ அல்லது ஒரே நாட்களிலோ திருமணம் செய்ய கூடாது.
கிராமத்தில் நிலம் இருந்தால் அதனை விற்று விட்டு நகரத்தில் இடத்தை வாங்கி வீடு கட்டுவார்கள். சில பேர் நம்முடைய சொந்த ஊர் இங்கையே வீடு கட்டுவோம் என்று நினைப்பார்கள். அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு பயனுள்ளதாக என்று நம்புகிறேன். வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |