அந்தா வரார் ஐயப்பா பாடல் வரிகள்..! | Antha Varar Ayyappa Song Lyrics in Tamil

Advertisement

Antha Varar Ayyappa Song Lyrics in Tamil

நாம் அனைவருமே கடவுளை தினமும் வழிபடுவது வழக்கம். ஆனால், ஒவ்வொரு கடவுளை வழிபடுவதற்கு ஒரு நாள் அல்லது ஒரு மாதம் உகந்த மாதமாக இருக்கும். அந்த காலங்களில் கடவுளின் முழு ஆசீர்வாதமும் கிடைக்கும். உதாரணமாக, ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக இருக்கிறது. இந்நாளில், அம்மனை வழிபடுவதன் மூலம் அம்மனின் அருளை பெற முடியும். இதுபோன்று ஒவ்வொரு கடவுளையும் வழிப்படுவதற்கு உகந்த காலம் என்பது இருக்கும். எனவே, அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத தொடக்கத்தில் ஐயப்பன் சுவாமிக்கு பக்தர்கள் மாலை அணிந்து 1 மண்டலம் விரதம் இருந்தது அதன் பிறகு, சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செய்வார்கள். அவர்கள் விரதம் இருக்கும் ஒரு மண்டலம் முழுவதும் ஐயப்பனுக்குரிய பாடல்களை பாடி தூய்மையாக வழிபடுவார்கள்.

எனவே, ஐயப்பனை போற்றி வழிபடக்கூடிய பாடல்கள் நிறைய உள்ளன. அப்பாடல்களில் ஒன்றான அந்தா வரார் ஐயப்பா பாடல் வரிகள் பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க .மேலும், நம் பொதுநலம் பதிவில் இதுபோன்று ஆன்மீக பகுதியில் பல்வேறு கடவுள்களை போற்றி பாடக்கூடிய பாடல்களை பதிவிட்டு வருகிறோம்.

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா பாடல் வரிகள்.

அந்தா வரார் ஐயப்பா பாடல் வரிகள்:

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

சன்னதி விட்டிறங்கி சாஸ்தா வர்றார் பாரப்பா
பதினெட்டாம் படியிறங்கி பார்க்க வர்றார் ஐயப்பா

சரங்குத்தி எல்லை விட்டு சாஸ்தா வர்றார் பாரப்பா
சக்தி உமை பாலனாக காட்சி தர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

சபரியின் பீடம் விட்டு தாண்டி வர்றார் ஐயப்பா
சாந்த ஸ்வரூபனாக காட்சி தர்றார் ஐயப்பா

நீலிமலை தான் கடந்து நேரே வர்றார் ஐயப்பா
நித்ய பிரம்மச்சாரியாக காட்சி தர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

பம்பாநதி தான் கடந்து பார்க்க வர்றார் ஐயப்பா
பம்பையின் பாலனாக காட்சி தர்றார் ஐயப்பா

கரிமலை உச்சி தாண்டி ஓடி வர்றார் ஐயப்பா
காவலுக்கு கருப்பனையே கூட்டி வர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

அழுதாமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா
ஹரிஹர புத்திரனாய் காட்சி தர்றார் ஐயப்பா

காளைக்கட்டி தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா
காந்தமலை ஜோதியாக காட்சி தர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

எரிமேலி பேட்டைத் துள்ளி இங்கே வர்றார் ஐயப்பா
ஏகாந்த மூர்த்தியாக காட்சி தர்றார் ஐயப்பா

பந்தளத்து தேசம் விட்டு பார்க்க வர்றார் ஐயப்பா
பக்தருக்கு பக்தனாக காட்சி தர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

குளத்துப்புழை தான் கடந்து கூவி வர்றார் ஐயப்பா
குழந்தை உமை பாலனாக காட்சி தர்றார் ஐயப்பா

அச்சன் கோவில் தான் கடந்து அந்தா வர்றார் ஐயப்பா
அரசனாக அருளோடு காட்சி தர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

ஆரியங்காவு தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா
ஆனந்த ரூபனாக காட்சி தர்றார் ஐயப்பா

குற்றாலம் தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா
குமர குருபரனைக் கூட்டி வர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

மதுரையின் எல்லையிலே மணிகண்டன் ஐயப்பா
மதுரை நகர் பக்தருக்கு காட்சி தர்றார் ஐயப்பா

யாத்திரை குழுவிற்கு வந்து விட்டார் ஐயப்பா
ஐயப்பன் படத்தினிலே அமர்ந்து விட்டார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

அந்தா வர்றார் ஐயப்பா
இந்தா வர்றார் ஐயப்பா
ஐந்துமலை தான் கடந்து ஓடி வர்றார் ஐயப்பா

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

எங்கே ஓடுது எங்கே ஓடுது ஐயப்பன் பாடல் வரிகள்..

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement