Anusham Natchathiram
நம்முடைய இரண்டு கைகளிலும் 10 விரல்கள் உள்ளது. ஆனால் அத்தகைய விரல்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. அதேபோலத்தான் மனிதர்களின் குணமும். அதனால் ஒருவரின் குணம் என்ன அவருக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்ற விவரங்களை அவர்களுடன் நெருங்கி பழகினால் மட்டுமே தான் தெரிந்துக்கொள்ள முடியும். ஆனால் இத்தகைய விவரங்களை அனைத்தினையும் ஒருவரின் ராசி மற்றும் நட்சத்திரத்திரத்தினை வைத்து கணக்கிட முடியும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. ஆகவே இன்று விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றியும் அவர்களுக்கான அதிர்ஷ்டமான நிறம், எண் மற்றும் இதர அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
அனுஷம் நட்சத்திரம் குணங்கள்:
அனுஷம் நட்சத்திரம் ஆனது 27 நட்சத்திரங்களில் 17-வது நட்சத்திரமாக உள்ளது. இது விருச்சிக ராசிக்கு உரிய நட்சத்திரம் ஆகும்.
- அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குழந்தை தன்மை உடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் அன்பாகவும், உண்மையினை மட்டும் பேசும் தன்மை கொண்டவராக இருப்பார்கள்.
- அதுமட்டும் இல்லாமல் நிகழ்காலத்தை பற்றி யோசிப்பதை விட எதிர்காலத்தை பற்றி அதிகமாக சிந்தித்து செயல்படும் குணம் படித்தவர்கள்.
- இத்தகைய நட்சத்திரக்காரர்கள் தெளிவான பேச்சு ஆற்றலையும் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அதிக பாசத்தினையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- இவர்கள் சிறு வயதிலேயே நன்றாக சிந்தித்து செயல்படும் தன்மை கொண்டவர்கள். மேலும் உதவி என்று கேட்டால் தயக்கம் இல்லாமல் செய்யும் பக்குவம் வாய்ந்தவர்கள்.
- விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை பற்றி நன்றாக அறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு பேசும் திறமை வாய்ந்தவர்கள். ஆனால் ஒரு செயலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் பாதியிலேயே விட மாட்டார்கள்.
- மேலும் இந்த நட்சத்திரக்காரர்கள் கடின உழைப்பிற்கு எடுத்துக்காட்டாகவும், திறமை உடையவருக்கு சிறந்தவராகவும் இருக்கிறார்கள்.
- அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நே, நு, நி மற்றும் நா ஆகிய எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும்.
கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி தெரியுமா |
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்:
கல்வி:
இந்த நட்சத்திரக்காரர்களுக்கு கல்வி என்பது சரளனமான ஒன்றாக உள்ளது. அதனால் இவர்கள் கல்வியில் நன்றாக வல்லமை கொண்டவராக இருப்பார்கள்.
தொழில்:
இவர்கள் எந்த தொழில் அல்லது வியாபாரம் செய்தாலும் அதில் கடின உழைப்பினை செலுத்தி வெற்றியினை காண வேண்டும் என்ற விடா முயற்சியோடு செயல்படுவார்கள்.
மேலும் இவர்களுக்கு கலை தொடர்பான துறை மீது அதிக ஆர்வம் இருக்கும்.
அனுஷம் நட்சத்திரம் திருமண வாழ்க்கை:
ஆரம்ப கால வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை பட்டாலும் கூட திருமணத்திற்கு பிறகு சுமுகமான வாழ்க்கை தான் இவர்களுக்கு கிடைக்கும். அதற்கு ஏற்றவாறு குடும்பத்தில் உள்ளவர்களின் மீதும் பாசம் அதிகமாக வைப்பார்கள்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் இப்படி தான் இருக்குமா |
அனுஷம் நட்சத்திரம் ராசி கல் மற்றும் நிறம்:
- அதிபதி- சனி
- ராசிக்கல்- நீலக்கல்
- ராசியான நிறம்- கருநீலம்
- அதிர்ஷ்ட எண்- 8, 6, 5
- மந்திரம்- ஓம் மித்ராய நம
அனுஷம் நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரங்கள்:
ஆண்களுக்கு பொருத்தமான நட்சத்திரம்:
- பூரட்டாதி, ரேவதி, உத்திரம் மற்றும் உத்திராடம் 2, 3 மற்றும் 4-ஆம் பாதம்.
பெண்களுக்கு பொருத்தமான நட்சத்திரம்:
- ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி, கேட்டை, சதயம் மற்றும் பூரட்டாதி 1, 2 மற்றும் 3-ஆம் பாதம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |