அப்பா கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா.?

Advertisement

அப்பா கனவில் வந்தால் என்ன பலன்

பொதுவாக நாம் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும் போது கனவு ஏற்படும். இந்த கனவானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கனவு ஏற்படும். மேலும் நாம் அதிகாலையில் ஏற்பட கூடிய கனவுகள் பலிக்கும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அது போல நாம் காண்கின்ற ஒவ்வொரு கனவிற்கு ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. கனவுகள் ஆனது நமக்கு ஏற்பட கூடிய கெட்ட விஷயங்களை உணர்த்தி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அதனால் இந்த பதிவில் அப்பாவை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை அறிந்து கொள்வோம்.

அப்பா இறப்பது போல் கனவு கண்டால்:

அப்பா இறப்பது போல் கனவு கண்டால் இதுநாள் வரையில் நீங்கள் விஷயத்தை எடுத்து அதை முடிக்க வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள், ஆனால் அதற்காக ரொம்பகஷ்டப்படுவீர்கள். இந்த வேலையானது வெற்றியில் வந்து முடிவடையும் என்பதை இந்த கனவு உணர்த்துகிறது.

அப்பா பேசுவது போல் கனவு கண்டால்:

அப்பா பேசுவது போல் கனவு கண்டால் நீங்கள் ஒரு பிரச்சனையில் இருக்கிறீர்கள், அந்த பிரச்சனைக்கான தீர்வை காண்பதற்கு நண்பர் அல்லது ஆலோசகர் கிடைக்க போகிறார்கள் என்பதை குறிக்கிறது.

எந்த ராசிக்காரர்கள் கருங்காலி அணியலாம் என்று தெரியுமா..?

அப்பா அடிப்பது போல கனவு:

அப்பா அடிப்பது போல கனவு கண்டால் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் சண்டைகள் ஏற்பட போகிறது. அதனால் அவ்வப்போது அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

அப்பா உடல்நல பிரச்சனை ஏற்படுவது போல கனவு:

அப்பாவிற்கு உடல்நல பிரச்சனை ஏற்படுவது போல கனவு கண்டால் நீங்கள் செய்கின்ற செயலை கவனமாக செய்ய வேண்டும். மேலும் அலுவலகத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

அப்பா மகிழ்ச்சியாக இருப்பது போல கனவு:

அப்பா மகிழ்ச்சியாக இருப்பது போல கனவு கண்டால் நீங்கள் ஏதும் பிரச்சனைகளில் சிக்கி கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதை இந்த கனவு உணர்த்துகிறது.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement