அரசாங்க வேலை கிடைக்க பரிகாரம்
மனிதனாக பிறந்த அனைவருக்கும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பணத்தை சம்பாதிப்பதற்கு கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டும். சில நபர்கள் பிடித்த வேலைய செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர், சில நபர்கள் படித்த படிப்பிற்கேற்ற வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் கால் காசு வருமானமாக இருந்தாலும் அரசாங்க வேலையாக இருந்தால் நல்லது என்று நினைக்கின்றனர். ஏனென்றால் அரசாங்க வேலையாக இருந்தால் நிரந்தரமான வேலையாக இருக்கும். சலுகைகளும் அதிகமாக கிடைக்கும் என்பதால் அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இந்த பதிவில் அரசாங்க வேலை கிடைப்பதற்கான பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
அரசாங்க வேலை கிடைக்க பரிகாரம்:
சிவபெருமானுக்கு உரிய பரிகாரம்:1
ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிலிருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
காலை எழுந்து குளித்து விட்டு 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும். சிவனுக்கு உரிய பூவான செந்தாமரை அல்லது செண்பகப்பூ இந்த இரண்டு பூக்களில் ஏதவாது ஒரு பூவை வாங்கி கொள்ளவும். நீங்கள் வாங்கி வந்த பூவை சிவனுக்கு உங்களது பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
சொந்தமாக நிலம் வைத்திருக்கிறீர்களா..? இதோ வீடு கட்ட எளிய பரிகாரம்…!
பிறகு மண் அகல் விளக்கில் ஐந்து திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். சிவபெருமானிடம் மனம் உருகி அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொண்டே கோவிலை மூன்று முறை சுற்றி வர வேண்டும். கோவிலில் அமர்ந்து சிவாய நம என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இப்படி பரிகாரத்தை தொடர்ந்து 11 வாரம் செய்ய வேண்டும்.
சிவபெருமானுக்கு உரிய பரிகாரம்:2
வாரந்தோறும் திங்கட் கிழமையில் பால் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். சிவனுக்கு வில்வ மாலை அணிவிக்க வேண்டும். இதன் மூலம் சிவபெருமான் மனம் உருகி உங்களுக்கு அரசு கிடைப்பதில் இருந்த தடைகள் நீங்கி அரசு வேலை கிடைப்பதற்கு வழியை செய்வார்.
மேல் கூறப்பட்டுள்ள பரிகாரத்தில் ஏதாவது ஒரு பரிகாரத்தை மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள். மேலும் பரிகாரத்தை மட்டும் செய்வதோடு மட்டுமில்லாமல் அதற்கான முயற்சிகளையும் செய்து வந்தால் கண்டிப்பாக அரசு வேலை கிடைக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |