அரசு வேலை கிடைக்க வழிபட வேண்டிய தெய்வம்..!

Advertisement

அரசாங்க வேலை கிடைக்க வழிபட வேண்டிய தெய்வம்!

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.. நமது வலைத்தளத்தில் பலவகையான ஆன்மிகம் சார்ந்த பதிவுகளை பதிவு செய்து வருகின்றோம்.. அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் அரசு வேலை கிடைக்க வழிபட வேண்டிய தெய்வங்கள் எது என்பதை பற்றி தான்.

பொதுவாக இன்றிய காலத்தில் அரசு வேலை கிடைப்பது என்பது மிக பெரிய விஷயமாக உள்ளது. என்னதான் முயற்சி செய்தாலும் அரசு வேலை கிடைப்பது என்பது சாதரண விஷயம் இல்லை. காரணம் அதற்கு நாம் பொது தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்கள் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அதனுடன் சேர்த்து இங்கு கூறப்பட்டுள்ள தெய்வங்களையும் வழிபடுங்கள் நிச்சயம் நீங்கள் தேர்வில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. வெறும் கடவுளை மட்டும் வழிபட்டுவிட்டு தேர்வில் வெற்றி பெற வில்லை என்று சொல்ல கூடாது, நீங்கள் அந்த தேர்வில் வெற்றி பெற அதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அப்பொழுது தான் அந்த தெய்வத்தின் அருள் உங்களுக்கு கிடைத்து, அரசு வேலை கிடைப்பதற்க்கான வாய்ப்புகளை பெற்று தரும். சரி வாங்க அந்த தெய்வங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இலுப்பை எண்ணெய் தீபம் வீட்டில் ஏற்றலாமா?

அரசு வேலை கிடைக்க வழிபட வேண்டிய தெய்வம்:

சூரிய பகவானை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு நிச்சயமாக நல்ல வருமானத்தில் வேலை கிடைக்கும்.  தேவைக்கு ஏற்ப மாதம்தோறும் நிலையான வருமானம் கைக்கு வந்து கொண்டே இருக்கும்.

அரசு வேலையும் கிடைத்த வேலை நிரந்தரமாக தங்கவும், வேலையில் இருக்கும் பிரச்சினைகள் தீரவும் முருகப்பெருமானை வழிபடலாம்

ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று பச்சை புடவை சாற்றி வழிபட வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அனுமனை தொடர்ந்து வழிபடுவதோடு அனுமன் சாலிசாவையும் தொடர்ந்து படிக்க வேண்டும். அனுமன் வால் வரைந்து அதில் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபட அரசு வேலைக்கான வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement