வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அரிசியை எந்த கிழமையில் வாங்கினால் செல்வம் பெருகும்..!

Updated On: September 16, 2025 12:00 PM
Follow Us:
Aanmigam Thagaval 
---Advertisement---
Advertisement

அரிசி வாங்க உகந்த நாள் | Arisi Vanga Nalla Naal in Tamil

ஆன்மிக நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.. பொதுவாக அனைவரது வீட்டிலும் கண்டிப்பாக மாதம் ஒரு முறை அரிசி வாங்குவோம். அல்லது வாரத்திற்கு ஒரு அரிசி வாங்குவோம். இது அவர்களது வருமானத்தை பொறுத்தது. இருப்பினும் அந்த அரிசியை கூட வாங்க முடியாத அளவிற்கு சில வீடுகளில் கஷ்டம் இருக்கும். அங்குதான் பிரச்சனை இருக்கிறது. ஆன்மிகம் சாஸ்த்திரம் படி பொதுவாக அரிசி வாங்குவதற்கென்று ஒரு தினம் இருக்கிறது. அந்த தினத்தில் நாம் அரிசி வாங்கினோம் என்றால் வீட்டில் செல்வவளம் பெருகும். சரி வாங்க இன்றைய பதிவில் அரிசியை எந்த கிழமையில் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதை பற்றி அறியலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அரிசி வகைகளும் அதன் பயன்களும்

அரிசியை எந்த கிழமையில் வாங்கினால் செல்வம் பெருகும்..!rice

  •  பசியை போக்கக்கூடிய இந்த அரிசியை நாம் திங்கட்கிழமை அன்று வாங்கினோம் என்றால் நமது வீட்டிற்கு செல்வ வளத்தை கொடுக்கும். 
  • ஆக மாதம் மாதம் அரிசி வாங்குபவர்களாக இருந்தாலும் சரி, வாரம் வாரம் அரிசி வாங்குபவர்களாக இருந்தாலும் சரி அந்த அரிசியை திங்கட்கிழமை அன்று வாங்கவும். அப்படி வாங்கும் அரிசியை நீங்கள் கடனுக்காக வாங்கிவிட கூடாது. காசு கொடுத்து தான் வாங்க வேண்டும்.
  • ஒரு வேளை கடனுக்காக அரிசியை வாங்குனீர்கள் என்றால் வீட்டில் கஷ்டம் தான் அதிகரிக்கும். கடைகளில் அக்கௌன்ட் வைத்து பொருட்களை வாங்குபவர்களாக இருந்தாலும் சரி அவர்களும் அரிசிக்கு மட்டும் காசு கொடுத்துவிட்டு அரிசியை வாங்கவும்.
  • இந்த விஷயத்தை மட்டும் நீங்கள் பின்பற்றினால் கண்டிப்பாக உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருகும், மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்து நிற்கும்.
  • உங்களுக்கு நிறைய கடன் பிரச்சனை இருக்கிறது என்றால், அரிசியை திங்கட்கிழமையில் மட்டும் வாங்கி பாருங்கள். உங்களுடைய கடன் பிரச்சனை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
  • அதேபோல் அரிசி பானையை அலமாரியின் மேல் வைக்க வேண்டாம், தரையிலேயே வைக்கவும். மேலும் அரிசி பானையில் அரிசியை அளப்பதற்கு பயன்படுத்தும் ஆழாக்கு இருக்க வேண்டும். ஆழாக்கு பயன்படுத்தாதவர்கள் ஒரு டம்ளரையாவது அரிசி பானையில் போட்டு வைக்கவும். அரிசி அளக்கும் படியில் கட்டாயம் சாஸ்திரத்திற்கு இரண்டு அரிசிகள் இருக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை அரிசி வாங்கலாமா:

வெள்ளிக்கிழமையில் அரிசி வாங்கலாம். இந்த நாளில் வாங்குவதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்பு ஆனது அதிகரிக்கும். ஆனால் இந்த அரிசியை பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும். கடனுக்காக வாங்க கூடாது. யாரும் இந்த வெள்ளிக்கிழமையில் அரிசி கேட்டால் கடனுக்காக கொடுக்க கூடாது.

சனிக்கிழமை அரிசி வாங்கலாமா:

சனிக்கிழமை அரிசி வாங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த கிழமை ஆனது அரிசி வாங்குவதற்கு உகந்த நாளாக இருக்காது. ஆன்மீகத்தின் படி இந்த நாளில் தானியங்கள் மற்றும் அரிசி வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
துடைப்பம் வாங்க உகந்த நாள் இதுதான்.!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now