ஆருத்ரா தரிசனம் 2025 ஆம் ஆண்டு எப்போது கொண்டாடப்படுகிறது..? | தேதி மற்றும் நேரம் இதோ..!

Advertisement

ஆருத்ரா தரிசனம் 2025 தேதி மற்றும் நேரம் | Arudra Darisanam 2025 Date And Time in Tamil

மார்கழி மாதம் என்றாலே சிறப்பு தான் இறைவழிபாட்டிற்கு உகந்த மாதம் மார்கழி மாதம் தான். மார்கழி மாதத்தில் பெண்கள் அனைவரும் அதிகாலை எழுந்து வீட்டு வாசலில் கோலம் போட்டு விளக்கு ஏற்றி பூஜை செய்வார்கள். அதேசமயம் அதிகாலை பெருமாள் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நாடாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் திருவாதிரை நடச்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

ஆருத்ரா தரிசனம் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் நடைபெறும். சிவபெருமானுக்கு உயர்வான அபிஷேகத்தில் ஒன்றுதான் ஆருத்ரா தரிசனம். ஆருத்ரா தரிசனத்தை பார்த்தால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. திருவாதிரை என்ற சொல் சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்று குறிப்பிடப்படுகிறது. திருவாதிரை தினத்தன்று நடராஜ பெருமானுக்கு செய்யப்படும் சிறப்பான அபிஷேக ஆராதனைகளை ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.

திருவாதிரை விரதம் 2025 | Thiruvathirai Viratham 2025 in Tamil

ஆருத்ரா தரிசனம் எப்போது..?

இந்த ஆண்டு 2025 ஆருத்ரா தரிசனம் ஜனவரி 13 ஆம் தேதி, (மார்கழி 29 ஆம் தேதி) திங்கட்கிழமை அன்று வருகிறது.

பௌர்ணமி திதி தொடங்கும் நேரம் – ஜனவரி 13 ஆம் தேதி, காலை 05:03 AM மணி

பௌர்ணமி திதி முடியும் நேரம் – ஜனவரி 14 ஆம் தேதி, அதிகாலை 03:56 AM மணி

திருவாதிரை நட்சத்திரம் தொடங்கும் நேரம் – ஜனவரி 12 ஆம் தேதி, காலை 11:24 AM மணி

திருவாதிரை நட்சத்திரம் முடியும் நேரம் – ஜனவரி 13 ஆம் தேதி, காலை 10:38 AM மணி

Aaruthra Tharisanam Date In Tamil:

ஆருத்ரா தரிசனம் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் வெகு சிறப்பாக நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தை காண ஏராளாமான பக்தர்கள் அன்று கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபடுவார்கள். சிவன் பக்தர்கள் அனைவரும் அன்று கோவிலுக்கு சென்று ஆருத்ரா தரிசனத்தை கண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

ஆருத்ரா தரிசனம் என்பது தாண்டவம் என்று அழைக்கப்படும் சிவபெருமானின் பிரபஞ்ச நடனத்தை கொண்டாடும் ஒரு திருவிழா ஆகும். இது மார்கழி மாதத்தில் பௌர்ணமி திதியில் அனுசரிக்கப்படுகிறது. பக்தர்கள் நாள் முழுவதும் விரதமிருந்து, சிவபெருமானை வணங்கி, பூஜை அறையை மலர்களால் அலங்கரிக்கின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜனவரி 13,2025 (மார்கழி 29) திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

ஆருத்ரா நட்சத்திரத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா..?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement