ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன..! | Arudra Darisanam Endral Enna In Tamil..!
ஆருத்ரா தரிசனம் சிதம்பரத்தில் திருவாதிரை நடச்சத்திரத்தன்று வெகு சிறப்பாக நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தை காண்பதில் கோடி புண்ணியங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன மற்றும் ஆருத்ரா தரிசனத்தின் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
இந்த ஆண்டு 2025 ஆருத்ரா தரிசனம் ஜனவரி 13 ஆம் தேதி திருவாதிரை நட்சத்திரம் பௌர்ணமி அன்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வெகு சிறப்பாக நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தை காண ஏராளாமான பக்தர்கள் வருவார்கள். ஆருத்ரா தரிசனத்தின் வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஆருத்ரா தரிசனம் 2025 ஆம் ஆண்டு எப்போது கொண்டாடப்படுகிறது..? | தேதி மற்றும் நேரம் இதோ..!
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன:
ஆருத்ரா என்ற வடமொழி சொல் தமிழில் ஆதிரை என்று அழைக்கப்படுகிறது அதனுடன் திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவாதிரை என்று அழைக்கப்படுகிறது. திருவாதிரை அன்று நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் எல்லாம் வெகு சிறப்பாக நடக்கும். சிதம்பரத்திற்கு சென்று ஆருத்ரா தரிசனத்தை காணுவது நமக்கு முக்தியை தரும்.
உத்திரகோசமங்கை நடராஜர் வழிபாடு:
முதன் முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்ட இடம் திரு உத்திரகோசமங்கை இந்த இடத்தில தான் ஆருத்ரா தரிசனம் முதலில் கொண்டாடப்பட்டது. நடராஜர் சிலை நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதத்தால் ஆனது. ஆண்டுக்கு ஒரு முறை திருவாதிரை திருநாளில் மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்காக சந்தனம் கலைக்கப்பட்டு மீண்டும் அன்று இரவே சந்தனம் பூசுவது இந்த கோவிலின் வழக்கமாகும்.
திரு உத்திரகோசமங்கையில் சந்தனம் கலைக்கப்பட்ட மரகதத்தால் ஆன நடராஜரை காணலாம். ஆருத்ரா தரிசனம் அன்று காலை 32 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். பின்னர் தீபாராதனை நடைபெறும். அபிஷேகம் முடிந்த உடனே உத்திரகோசமங்கையில் மட்டும் தான் நடராஜருக்கு நைவேத்தியம் வழங்கப்படும். அதற்கு பிறகு தான் அலங்காரம் நடைபெறும்.
சிதம்பரம் நடராஜர் வழிபாடு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மூலவர் நடர்ஜரும் சிவகாமசுந்தரி அம்பாளும் உச்சவராக வெள்ளிரி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இதனாலேயே இந்த கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஆருத்ரா தரிசனம் வரலாறு:
பாற்கடலில் பள்ளிகொண்ட விஷ்ணு பகவான் ஒரு நாள் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தாரு இதை பார்த்த ஆதிசேஷன் உங்களுடைய மகிழ்ச்சிக்கு காரணம் என்ன என்று கேட்கிறார். அப்பொழுது விஷ்ணு பகவான் ஆடல் வள்ளலான சிவபெருமான் நடனத்தை திருவாதிரை நாளன்று நான் கண்டேன் நடராஜாராக சிவபெருமான் ஆடிய திருத்தாண்டவமே என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம் என்றார். இதை கேட்ட ஆதிசேஷனுக்கும் சிவபெருமான் நடனத்தை காண வேண்டும் என்று ஆவல் அதிகமாகி விட்டது. தன்னுடைய ஆசையை விஷ்ணு பகவானிடம் கூறிய ஆதிசேஷனை விஷ்ணு பகவான் பூலோகம் அனுப்பி வைத்தார்.
பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார் ஆஹிஷேஷன். பாதி முனிவராகவும் பாதி பாம்பாகவும் உருவம் எடுத்து பூலோகத்தில் தவம் இருந்தார். பல ஆண்டுகளாக தவம் செய்த ஆதிசேஷனுக்கு தவம் முடியும் காலம் வந்தது. தவம் செய்து கொண்டிருந்த முனிவர் முன்பு சிவபெருமான் தோன்றி காட்சி அளித்தார்.
பதஞ்சலி முனிவர் முன்பு தோன்றிய சிவபெருமான் நீ என்னை நோக்கி தவம் செய்தது போலவே வியாக்கிரபாத முனிவரும் என்னை நோக்கி தவம் செய்து கொண்டுருக்கிறார். நீங்கள் இருவரும் தில்லை வாருங்கள் உங்கள் இருவருக்கும் நான் திருத்தாண்டவ காட்சியை காட்டி அருள்வேன் என்று கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து மறைந்தார்.
பதஞ்சலி முனிவரும் வியாக்கிரபாத முனிவரும் சித்தமபுரம் தில்லை நடராஜர் கோவிலை வந்து சேர்ந்தனர். இருவரும் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை கண்டு மகிழ்ச்சி அடைத்தார்கள். மார்கழி திருவாதிரை அன்று சிவபெருமானின் தாண்டவத்தை கண்டால் தீராத நோய்களும் பாவங்களும் விலகும். தில்லையில் சிவபெருமானின் நடனத்தை பார்த்தால் முக்தி கிடைக்கும்.
ஆருத்ரா நட்சத்திரத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா..?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |