வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அஷ்டமி, நவமி, அமாவாசை போன்றவை நல்ல நாட்களா..? கெட்ட நாட்களா..?

Updated On: January 18, 2025 6:16 PM
Follow Us:
Ashtami Navami Good Or Bad in Tamil
---Advertisement---
Advertisement

அஷ்டமி நவமி நல்ல நாளா | Ashtami Navami Good Or Bad in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில், அஷ்டமி, நவமி, அமாவாசை  போன்ற நாட்கள் நல்ல நாட்களா இலை கெட்ட நாட்களாக என்பதை கொடுத்துள்ளோம். நம் அனைவருக்கும் இந்த குழப்பம் இருக்கும். ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

பொதுவாக அஷ்டமி, நவமி, அமாவாசை போன்ற நாட்கள் கெட்ட நாட்கள் என்றே பலபேர் சொல்வார்கள். இந்த நாட்களில் எந்த நல்ல காரியங்களையும் தொடங்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்..? அப்படி பார்த்தால் ஒரு மாதத்தில் பாதி நாட்கள் கெட்ட நாட்களாக தானே இருக்கும். அஷ்டமி, நவமி நாட்களில் நல்ல காரியங்களை செய்யலாமா..? செய்யக்கூடாதா..? என்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Ashtami Navami is Good or Bad in Tamil

கௌரி பஞ்சாகத்தில் நல்ல காரியங்களை செய்யக்கூடாத நாட்கள் என்று சில நாட்கள்  குறிக்கப்பட்டிருக்கும். அப்படி பார்த்தால் ஒரு மாதத்தில் 22 முதல் 24 நாட்கள் வரை கெட்ட நாட்களாகத்தான் இருக்கும். மீதமுள்ள நாட்களில் தான் நல்ல காரியங்களை செய்யலாம் என்றால் அது எப்படி சாத்தியமாகும்.

அஷ்டமி, நவமி கெட்ட நாட்கள் என்று கூறுவதற்கான வரலாறு:

 அஷ்டமி நவமி நல்ல நாளா

 நம் முன்னோர்கள் அஷ்டமி, நவமியை கெட்ட நாட்கள் என்று கூறுவதற்கு ஒரு கதை உண்டு. அது என்னெவென்றால் திதிகள் அனைத்தும், ஒரு நாள் சிவபெருமானிடம் சென்று, அமாவாசையும், பௌர்ணமியும் மாதத்தில் ஒரு நாட்கள் மட்டுமே வருகின்றன ஆனால் மற்ற அனைத்து திதிகள் மாதத்தில் இரண்டு நாட்கள் வருகின்றன என கவலையுடன் கேட்டனர். 

அதற்கு சிவபெருமான், “ஒவ்வொரு திதிக்கும் ஒரு சிறப்பு உண்டு” உங்களின் பெருமை உங்களுக்கு தெரியாமல் இருப்பதால் தான் இப்படி கேட்குறீர்கள் என்று கூறினாராம். பிறகு ஒவ்வொரு திதியின் பெருமையையும் சொல்லி புரிய வைத்தாராம்.

அஷ்டமி அன்று இந்த தவறை செய்து விடாதீர்கள்..! அதேபோல் இதை செய்தால் நன்மை உண்டாகும்..!

சாபம் கொடுத்த சிவபெருமான்:

 amavasya is good or bad in tamil

 சிவபெருமான் கூறியதை கண்டு கொள்ளாமல், அஷ்டமியும் நவமியும் தனியாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்த சிவபெருமான் கோபமடைந்து ” என்னை மதிக்காமல் இருந்த உங்களை இந்த உலகத்தில் உள்ளவர்களும் மதிக்காமல் ஒதுக்குவார்கள்” என்று சாபம் வழங்கி விட்டார். பிறகு தவறை உணர்ந்த அஷ்டமியும், நவமியும் சிவபெருமானிடம் சென்று மன்னிப்பு கேட்டன. சிவபெருமான் மனமிறங்கி திருமாலிடம் சென்று இதற்கு தீர்வு கேளுங்கள் என்று கூறினாராம். 

வரம் கொடுத்த பெருமாள்:

அமாவாசை நல்ல நாளா கெட்ட நாளா

 அஷ்டமியும், நவமியும் பெருமாளிடம் சென்று நடந்ததை கூறி தீர்வு கேட்டன. அதற்கு பெருமாள் கவலைப்படாதீர்கள் “நான் எடுக்க போகும் அவதாரத்தில் உலகத்தார் உங்களை கொண்டாடுவார்கள்” என்று கூறினார். அதுபோலவே பெருமாள் எடுத்த ராம அவதாரத்தில் நவமி அன்றும், கிருஷ்ண அவதாரத்தில் அஷ்டமி அன்றும் அவதரித்தார். பிறகு ராமநவமி கோகுலாஷ்டமி என வணங்கும் நாட்களாக மாற்றினார். எனவே அஷ்டமியும் நவமியும் வரம் வாங்கியதால், நல்ல நாட்கள் என்று அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். ராமரையும், கிருஷ்ணரையும் நாம் வணங்கும் போது அவர்கள் அவதரித்த அஷ்டமியும் நவமியும் மட்டும் எப்படி கெட்ட நாட்களாக இருக்க முடியும். 

Amavasya is Good or Bad in Tamil | அமாவாசை கெட்ட நாளா..? நல்ல நாளா..?

அமாவாசை என்றாலே அனைவரும் கெட்ட நாள் என்று நினைப்பதுண்டு. அமாவாசை தர்ப்பணம், திதி கொடுப்பதற்கு உகந்த நாள். நம் முன்னோர்கள் இந்த அமாவாசை நாளை நிறை நாள் என்று கூறுவார்கள். அப்படி என்றால் அமாவாசை வணங்குவதற்கு மட்டுமின்றி எல்லா செயல்களையும் தொடங்குவதற்கும் ஏற்ற நாட்களாகவும் இருக்கிறது. அமாவாசைக்கு பிறகு வரும் பிறை படிப்படியாக வளர்ந்து முழு நிலவாக ஆகும். அதேப்போல் இந்நாளில் தொடங்கப்படும் படிப்பு, தொழில் போன்ற பல செயல்கள் படிப்படியாக உயர்ந்து நிறைவான பலனை தரும் என்பதால் இந்நாளை நிறை நாள் என்று குறிப்பிடுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் நம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற தானம் தர்மங்களை செய்வதற்கும் உகந்த நாளாக உள்ளது. சாதாரண நாட்களை விட அமாவாசை நாட்களில் ஜீவ சமாதிகளின் ஆற்றல் அதிகமாக இருக்கிறது. அந்நாளில் ஜீவ சமாதிகளை சென்று தியானம் செய்தோம் என்றால் மனதில் அளவற்ற ஆற்றலை உணர முடிகிறது. அதனால் தான் இந்த மாதிரி ஜீவ சமாதிகளில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தான் சிறப்பு பூஜை செய்து வருகிறார்கள்.

மகாளய அமாவாசை வழிபாடு

அமாவாசை காரணங்கள்:

 சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும் நாளைத்தான் அமாவாசை என்கிறோம் . எனவே ஒரே நாளில் சூரியனின் ஆற்றலும், சந்திரனின் ஆற்றலும் கிடைக்கக்கூடிய நாள். ஜோதிடத்தில் சூரியனை ஆத்மகாரகன் என்றும், சந்திரனை மனோகாரகன் என்றும் சொல்லுவார்கள்.

ஒரு செயலில் வெற்றி பெறுவதற்கு ஆத்ம சக்தியும், மனோ சக்தியும் ஒன்றுபட வேண்டும். இவை இரண்டும் ஒன்று பட்டுதான் வெற்றியை நமக்கு தருகிறது. அப்படி இருக்குபோது இவை இரண்டும் ஒரே நாளில் கிடைக்கக்கூடிய அமாவாசை  கெட்ட நாளாகாது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now