Astro Remedies to Make Money in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே ஒரு பொதுவான குறிக்கோள் உள்ளது. அது என்னவென்றால் அதிக அளவு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது தான். ஏனென்றால் பணம் தான் இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் என்றாகிவிட்டது. அதாவது நாம் நமக்கு தேவையான ஒரு சிறிய பொருள் வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு நமக்கு தேவைப்படுவது பணம் தான். அதனால் தான் அனைவருமே தங்களுக்கு தேவையான பணத்தை மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார்கள். ஆனால் நம்மிடம் வந்து ஒரு சிலர் நான் நன்றாக தான் சம்பாதிக்கிறேன் ஆனாலும் என்னிடம் பணம் தாங்கவே மாட்டேங்குது என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டங்களும் நீங்கி பணவரவு அதிகரிக்க உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பரிகாரத்தை செய்து பயன் பெறுங்கள்.
எப்பேர்ப்பட்ட கடனும் நீங்க பெளர்ணமி நாளன்று இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்க போதும்
பணவரவு அதிகரிக்க பரிகாரம்:
உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டங்களும் நீங்கி பணவரவு அதிகரிக்க உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
அதற்கு முன்பு இந்த பரிகாரத்திற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம் வாங்க.
- பூஜை சோம்பு – 1
- சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- பச்சை கற்பூரம் – 1
பரிகாரம் செய்யும் முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள பூஜை சோம்பில் முழுவதும் தண்ணீரை நிரப்பி கொள்ளுங்கள். பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் சீரகம், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் 1 பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து உங்களின் பூஜை அறையில் ஒருநாள் இரவு முழுவதும் வைத்து கொள்ளுங்கள்.
இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் மட்டும் போதும் படிக்காத குழந்தைகள் கூட நன்கு படிப்பார்கள்
பின்னர் மறுநாள் அதிகாலையில் நீங்கள் வாசல் தெளிக்கும் நீருடன் சிறிதளவு சேர்த்து தெளியுங்கள். அதேபோல் வீடு முழுவதும் தெளியுங்கள். அப்படிஇல்லையென்றால் நீங்கள் எங்கெல்லாம் பணம் வைத்திருப்பீர்களோ அங்கெல்லாம் தெளியுங்கள்.
பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:
இந்த பரிகாரத்திற்கு தேவையான தண்ணீரை வியாழக்கிழமை இரவே தயார் செய்து மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள்.
நல்ல அல்லது நிரந்தர வேலை கிடைக்க தினமும் 5 முறை இதை மட்டும் செய்யுங்கள் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |