திருமணம் தாமதம் ஆகும் என்பதை உணர்த்தும் ஜாதகம்..! தெரிந்து கொள்வது எப்படி.?

Advertisement

Astrological Reasons for Delay in Marriage

மனிதருடைய வாழ்க்கை முறையை தீர்மானிப்பதே அவர்களின் ஜாதகம் தான். பிறந்த தேதி, கிழமை மற்றும் நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. இதனால் நம் வாழ்க்கையில் சுப காரியங்கள் மற்றும் அசுப காரியங்கள் அனைத்திற்கும் ஜாதகம் பார்க்கப்படுகிறது. அதாவது, வீட்டில் ஒரு சுப காரியம் செய்ய போகிறோம் என்றால் அதற்கு முன்பாக ஜாதகம் பார்ப்பது வழக்கம். நம் ஜாதகத்தில் வாழ்க்கை முறை முழுவதும் அமைந்திருப்பதால் கல்வி, வேலை, சுப நிகழ்ச்சிகள் என அனைத்தையும் ஜாதகம் பார்த்து தான் தொடங்குவார்கள்.

முக்கியமாக, திருமண பொருத்தம் பார்ப்பதற்கு ஜாதகம் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. சிலருக்கு திருமண பொருத்தம் என்பதே இருக்காது. அதாவது, திருமணம் தள்ளிப்போய் கொண்டே இருக்கும். 30 வயதை தாண்டியும் சிலர்க்கு திருமண யோகம் என்பதே இருக்காது. இதற்கு முதல் காரணமாக இருப்பது ஜாதகத்தின் நிலை தான். அதாவது, ஜாதகத்தில் கிரக நிலை சரியில்லை என்றால் திருமணம் தாமதமாகும். எனவே, ஜாதகத்தில் எந்த கிரகம் எந்த இடத்தில் இருந்தால் திருமணம் தாமதம் ஆகும் என்பதை தெரிந்த்துக்கொள்ளலாம் வாங்க.

ஜாதகத்தில் குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி.?

ஜாதகத்தில் திருமணம் தாமதம் ஆகுவதற்கான காரணங்கள்:

சனி கிரகம்:

சனி பகவான் ஒரு ராசியில் 3 ஆண்டுகள் சஞ்சரித்து வருவார். அதுமட்டுமில்லாமல், நவகிரகங்களில், தாமதமான கிரகம் சனி கிரகம் ஆகும். அதாவது, எல்லா கிரகங்களை விடவும் சனி கிரகம் முகம் தாமதமாக சுழல்கிறது.

எனவே, ஜாதகத்தில் திருமண கட்டமான ஏழாம் கட்டத்தில்  சனி இருந்தால் அல்லது ஏழாம் வீடு ஏதோவொரு வகையில் சனியுடன் தொடர்பிருந்தால் திருமணத்தில் தாமதம் ஏற்படும்.

செவ்வாய் கிரகம்:

செவ்வாய் கிரகம் 7 அல்லது 8 ஆம் வீட்டில் இருந்தாலோ அல்லது அந்த வீடுகளில் செவ்வாய் தொடர்பு இருந்தாலோ அது திருமண தாமதத்தை குறிக்கும்.

கேது:

ஜாதகத்தில் இரண்டு அல்லது ஏழாம் வீட்டில் கேது அமர்ந்திருந்தால் திருமணம் தாமதமாவதற்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், சில காரணங்கள்:

  • ஜாதகத்தில் சாதகமான தசா புக்தி நடக்கவில்லை என்றால் திருமணம் தாமதமாகும்.
  •  ராகு அல்லது கேது லக்னம் 2,7, மற்றும் 8 ஆகிய இடங்களில் தனிமையில் அமர்ந்து இருந்தால் திருமணம் தாமதம் ஆகும்.
  • சனி மற்றும் செவ்வாய் சேர்ந்து லக்கினத்தில்7 மற்றும் 8 ஆம் வீட்டில் இருப்பது.
  • சனி மற்றும் செவ்வாய் பார்வை 2, 7அல்லது 8 ஆம் இடத்தில் இருப்பது.
  • ஏழாம் இடத்து அதிபதியோ அல்லது இரண்டாம் இடத்து அதிபதியோ, சனி ராகு கேதுவுடன் சேர்ந்து இருப்பது.
  • ஏழாம் இடத்து அதிபதியோ அல்லது இரண்டாம் இடத்து அதிபதியோ ஐந்தாவது இடத்தில இருபப்து.
  • இவ்வாறு கிரக நிலைகளின் சேர்க்கையும், நிலையும் திருமணம் தாமதமாவதை குறிக்கிறது.

திருமண பெயர் பொருத்தம்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement