Astrological Remedies for Debt Problems in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருமே இன்றைய காலகட்டத்தில் தங்களின் வாழ்க்கையை சீராக நடத்தி செல்வதற்கு மிக மிக முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அப்படி நமக்கு தேவைப்படும் பணத்தை நாம் மிகவும் கஷ்டப்பட்டு தான் சம்பாதிப்போம். ஆனாலும் அது நம்மிடம் நீண்ட நாட்களுக்கு நிலைத்து இருக்காது. இதனால் நாம் நமது பணத்தேவைக்காக கடன் பெறுவோம். அப்படி வாங்கும் கடனை திருப்பி செலுத்துவதற்குள் நாம் மிக மிக கஷ்டப்படுவோம். ஒருசிலருக்கு அதிக அளவு கடன் சுமை இருக்கும். அதனை எவ்வாறு குறைப்பது என்பது என்று தெரியாமல் மிகவும் மனவருத்தத்துடன் இருப்பார்கள். மேலும் ஒருசிலர் தனது ஒரு கடனை தீர்த்தால் மற்றொரு கடன் வந்து சேரும். அதனை எவ்வாறு போக்குவது என்பது தெரியாமல் மிகவும் கஷ்டப்படுவார்கள். இவ்வாறு கடன் பிரச்சனைகள் அதிகமாக உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த அப்பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள பரிகாரத்தை செய்து பயன் பெறுங்கள்.
எப்பேர்ப்பட்ட கடனையும் காணாமல் போவதற்கு வெல்லம் மட்டும் போதும்..
கடன் தீர பரிகாரம்:
உங்களுக்கு உள்ள அனைத்து கடன் பிரச்சனைகளும் நீங்க உதவும் பரிகாரம் ஒன்றினை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
அதற்கு முன்பு இந்த பரிகாரம் செய்ய தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.
- கண்ணாடி டம்ளர் அல்லது பாட்டில் – 1
- 1 ரூபாய் நாணயம் – 3
பரிகாரம் செய்யும் முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கண்ணாடி டம்ளர் அல்லது பாட்டிலில் முழுவதும் தண்ணீரை ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் எடுத்து வைத்துள்ள மூன்று 1 ரூபாய் நாணயங்களை போட்டு கொள்ளுங்கள்.
இதனை உங்களின் இடது கையில் வைத்து அதன் மேற்புறத்தில் வைத்து பெளர்ணமி வெளிச்சம் படும் இடத்தில் நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ உங்களுக்கு தேவையானவற்றை மனமார பிராத்தனை செய்யுங்கள்.
இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் மட்டும் போதும் படிக்காத குழந்தைகள் கூட நன்கு படிப்பார்கள்
பிறகு நீங்கள் கையில் வைத்திருந்த 1 கண்ணாடி டம்ளர் அல்லது பாட்டிலை இரவு முழுவதும் பெளர்ணமி வெளிச்சம் படும் இடத்தில் அங்கேயே வைத்துவிட்டு மறுநாள் காலையில் எடுத்து அந்த தண்ணீரை ஒரு பெரிய பாட்டில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.
அந்த நாணயங்களை நீங்கள் பணம் வைத்திருக்கும் இடத்தில் வைத்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் இருந்து ஒரு டீஸ்பூன் தினமும் குடியுங்கள். இவ்வாறு செய்வதால் உங்களின் அனைத்து கடன் பிரச்சனைகளும் நீங்கும்.
பரிகாரம் செய்யும் நேரம் மற்றும் நாள்:
இந்த பரிகாரத்தை பெளர்ணமி நாளன்று இரவு 8.00 மணிக்குமேல் செய்யுங்கள். அப்படியில்லை என்றால் பிர்மமுகுர்த்த நேரத்தில் செய்யுங்கள்.
நல்ல அல்லது நிரந்தர வேலை கிடைக்க தினமும் 5 முறை இதை மட்டும் செய்யுங்கள் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |