Athirstam Vara Enna Seiya Vendum
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம். பொதுவாக பெரும்பாலான வீடுகளில் அதிர்ஷ்டம் என்பதே இருக்காது. அதாவது, எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் வீட்டில் ஒரு ரூபாய் கூட தங்காமல் செலவாகிக்கொண்டே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் சில ஆன்மீக பரிகாரங்களை செய்ய வேண்டும். அதில் முக்கியமான ஒன்று மஞ்சள் பரிகாரம். மஞ்சள் ஒரு கிருமி நாசினி மட்டுமின்றி ஆன்மீகத்தில் ஒரு சக்தி வாய்ந்த பொருளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மங்களகரமான ஒன்று. எனவே இந்த மஞ்சளை வைத்து நாம் வீட்டில் எப்படி அதிர்ஷ்டத்தை வரவழைப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Turmeric Used in Astrology in Tamil:
அதிர்ஷ்டம் வர மஞ்சள்:
உங்களுக்கு நிதி நெருக்கடி இருந்தால் அதாவது பண கஷ்டம் இருந்தால் ஒவ்வொரு வியாழன் கிழமை அன்றும் மஞ்சளை விஷ்ணுவிற்கு அர்ப்பணித்து வழிபட வேண்டும். விஷ்ணுவை மகிழ்விப்பதன் மூலம், லட்சுமி தேவி தனது பக்தர்களுக்கு நற்பலன்களை அளிக்கிறார். இதனால் உங்களுக்கு இருக்கும் நிதி நெருக்கடி குறைய தொடங்கும். மேலும், அதிர்ஷ்டம் பெருகும்.
வீட்டில் பணவரவு பலமடங்கு அதிகரிக்க சந்தனமும் ஏலக்காயும் போதும்..!
பணம் திரும்ப வர மஞ்சள்:
உங்களுக்கு வரவேண்டிய பணம் வராமல் தடைபட்டு யாரோ ஒருவரிடம் தடைப்பட்டு இருந்தால் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
முதலில், மஞ்சள் தூளை எடுத்து கொள்ளுங்கள். இதில் சிறிதளவு அரிசி தானியங்களை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த சாயம் பூசப்பட்ட அரிசியை ஒரு சிகப்பு துணியில் வைத்து ஒரு முடிச்சு போட்டு கொள்ளுங்கள்.
இந்த முடிச்சியினை உங்கள் பணப்பை அல்லது நீங்கள் வீட்டில் பணம் வைத்திருக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பணம் உங்களிடம் எளிதில் வந்து சேரும்.
தடையில் இருந்த வேலை எளிதில் முடிய மஞ்சள்:
குரு பகவான் மஞ்சள் நிற பொருட்களை அதிகம் விரும்புவார். அதுமட்டுமில்லாமல், மஞ்சள் குரு பகவானுக்கு தொடர்புடைய ஒரு பொருள். எனவே மஞ்சள் நிற ஆடைகள், மஞ்சள் மற்றும் பனங்கற்கண்டு போன்ற பொருட்களை வியாழன் கிழமை அன்று தியானம் செய்து வருவதன் மூலம் உங்களுக்கு நீண்டநாட்களாக தடையில் இருந்த வேலை எளிதில் முடிவுக்கு வரும்.
தீபாவளிக்கு முன் ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |