அதிசார குரு பெயர்ச்சி 2021 எப்போது | Athisara Guru Peyarchi 2021 Palangal

Advertisement

அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் | Athisara Guru Peyarchi 2021 Date

Athisara Guru Peyarchi 2021 in Tamil/ Guru Athisara Peyarchi 2021: நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் அதிசார குரு பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம். சூரிய குடும்பத்தில் சூரியன் மற்றும் சந்திரனை தவிர மற்ற அனைத்து கிரகங்களுக்கும் அதிசார வக்கிர நிலையால் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவது வழக்கம்தான். இந்த இடம் பெயர்தலை தான் அதிசார கிரகப்பெயர்ச்சி என்று அனைவரும் கூறுகிறார்கள். அந்த வகையில் 2021-ம் ஆண்டு குருபகவான் பங்குனி மாதம் 24-ஆம் தேதி அதாவது ஏப்ரல் 06 அன்றைய தேதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குருபகவான் அதிசார பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சி கும்பம் ராசிக்காரர்களுக்கு நல்ல யோகத்தை அளிக்கக்கூடிய பெயர்ச்சியாகும். சரி இந்த குரு அதிசார பெயர்ச்சியால் (athisara guru peyarchi) எந்தெந்த ராசிக்கு யோக பலன்களையும், எந்தெந்த ராசிக்கு அசுப பலன்களை கொடுக்கப்போகிறார் என்பதை பற்றி இந்த பதிவில் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். 

குரு திசை பலன்கள்

newஆலங்குடி குரு பகவான் கோவிலின் சிறப்புகள் ..!

அதிசார குரு பெயர்ச்சி என்றால் என்ன?

athisara guru peyarchi 2021: அதிசாரம் என்பது கிரகங்கள் தனது சுற்றுப்பயணத்தில் சூரியனை ஒன்பது கிரகங்களும் சுற்றி வருகிறது. கிரகங்கள் இந்த சுற்று பயணத்தின் போது வேகம் எடுப்பதை தான் அதிசார குரு பெயர்ச்சி என்று கூறுகின்றன. அதாவது தற்போது தன்னை விட அதிக ஈர்ப்பு விசை கொண்ட செவ்வாய் கிரகத்தை கடந்து செல்லும் போது அதனால் ஈர்க்கப்படுவதால் குரு தன் சாதாரண நகர்வு வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் நகரத்தொடங்குவார். குருபகவான் தன் பயணத்தின் போது அதிக வேகம் எடுத்து மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு (அதிசார குரு பெயர்ச்சி 2021 கும்பம்) சென்று மீண்டும் மகரம் ராசிக்கு வந்து சேர்வார்கள். இதனை தான் அதிசார வக்கிர குருபெயர்ச்சி என்று சொல்லப்படுகிறது.

newஅதிசார குரு பெயர்ச்சி 2021 பலன்கள்

அதிசார குரு பெயர்ச்சி – பலன்களை பெறக்கூடிய ராசிகள்:

  1. மிதுனம் 
  2. சிம்மம் 
  3. துலாம் (athisara guru peyarchi 2021 thulam)
  4. தனுசு (athisara guru peyarchi 2021 dhanusu)
  5. மீனம் (athisara guru peyarchi 2021 meenam) 

குரு அதிசார பெயர்ச்சி 2021 – கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்:

  1. மேஷம் 
  2. கடகம் 
  3. கன்னி 
  4. விருச்சிகம் (athisara guru peyarchi 2021 viruchigam)
  5. மகரம் 

அதிசார குரு பெயர்ச்சி 2021 மிதுனம்:

Athisara Guru Peyarchi 2021 in Tamil

Athisara Guru Peyarchi 2021 Mithunam: அதிசார குரு பெயர்ச்சியில் மிதுன ராசிக்கு (mithunam athisara guru palan) குரு 5-ம் இடத்தில் இருப்பதால் உங்களுடைய ராசிக்கு பல நாட்களாக தட்டி போன அனைத்து நல்லகாரியங்களும் தடை நீங்கி நல்லபடியாக முடியும். மேலும் இந்த அதிசார குரு பெயர்ச்சியில் தொழிலில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கி வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

அதிசார குரு பெயர்ச்சி 2021 சிம்மம்:

Athisara Guru Peyarchi 2021 in Tamil

  • Athisara Guru Peyarchi Simmam 2021: சிம்ம ராசியில் குருவானது 7-ம் பார்வையில் அமர்ந்திருப்பதால் ராஜயோகத்தினை அடைவீர்கள். இதுவரை சிம்ம ராசிக்காரர்கள் எல்லாவற்றிலும் தோல்வியை மட்டுமே பார்த்து இருப்பீர்கள். இந்த அதிசார குரு (athisara guru peyarchi 2021) பெயர்ச்சியில் தோல்வி நீங்கி வெற்றியை நோக்கி செல்வீர்கள்.
  • உடல்நலம் சீராக இருக்கும். மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிரியினால் இருந்து வந்த பொறாமை குணங்கள், தொல்லைகள் போன்றவை நீங்கி மனதில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் காணுவீர்கள்.

அதிசார குரு பெயர்ச்சி 2021 துலாம்:

athisara guru peyarchi 2021 in tamil

Athisara Guru Peyarchi Thulam 2021: குருவினுடைய பார்வையானது துலாம் ராசியில் 9-ம் இடத்தில் இருப்பதால் மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் அனைத்திற்கும் நல்ல தீர்வு கிடைக்கும். உங்களை ஆட்டி வைத்த தீய எண்ணங்களிலிருந்து விலகி நல்ல வழியில் பயணம் செய்ய இருக்கிறீர்கள்.

அதிசார குரு பெயர்ச்சி 2021 தனுசு:

athisara guru peyarchi 2021 in tamil

  • Athisara Guru Peyarchi 2021 Dhanusu: குரு உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு அதிசாரமாக பெயர்ச்சியாகிறார். இந்த அதிசார பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு நிறைய நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். எந்தத் தொழில் செய்தாலும் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். மேலும் கடன் தொல்லை, மற்றவர்களிடம் வீண் விவாதங்கள் போன்றவை அனைத்தும் குறைந்து காணப்படும்.
  • அதிசார குரு பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு திருமண வாழ்க்கை, கல்வி, குழந்தை பாக்கியம், குடும்பத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த குரு அதிசார பெயர்ச்சியில் பிரிந்த கணவன் மனைவி சேருவதற்கு வாய்ப்புள்ளது. இந்த குரு அதிசார பெயர்ச்சியானது (athisara guru peyarchi) தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை மட்டுமே அளிக்கும்.

அதிசார குரு பெயர்ச்சி 2021 மீனம் | Athisara Guru Peyarchi 2021 Meenam:

athisara guru peyarchi 2021 in tamil

  • Athisara Guru Peyarchi 2021 Meenam: இந்த அதிசார குரு பெயர்ச்சியில் குருவானவர் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் வரையிலும் வீட்டில் குடியிருப்பார். மீன ராசியினருக்கு குருவின் பார்வையானது நான்காம் வீடு, ஆறாம் வீடு, எட்டாம் வீட்டில் உள்ளது. நான்காம் வீடானது மிக சிறந்த ஸ்தானம். இந்த நான்காம் வீடானது வாகனம், வீடு போன்றவைகளை குறிக்கும். மேலும் நான்காம் வீடு தாயாரை குறிக்கும். தாயாருக்கு உடல் ரீதியான அனைத்து நோய்களும் குணமாகும். பழுதடைந்த வீடு, வாகனம் சரி செய்வீர்கள்.
  • ஆறாம் பாவமான குருவின் பார்வையானது (athisara guru peyarchi 2021 meenam) ஏற்கனவே உடல் ரீதியான மருத்துவ செலவுகள், கடன் தொல்லை அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் வரும். எட்டாம் பாவமான குருவின் பார்வை ஆயுள் ஸ்தானத்தினை குறிக்கிறது. உயிர் சம்பந்த கண்டங்கள், பெரிய முயற்சிகளில் தோல்வியை அடைதல், கடன் தொந்தரவு போன்றவைகளை குரு பார்வையிடுவதால் அனைத்தையும் சரி செய்து விடுவார். குருவினுடைய பார்வை படக்கூடிய மீன ராசியினருக்கு 4,6,8 உங்களுடைய அந்தரங்க வாழ்க்கையானது நல்ல விதமாக இருக்கும்.
  • குருவின் பார்வை (guru athisara peyarchi 2021) இல்லாத மீன ராசியினருக்கு 5-ம் வீடானது புத்திர ஸ்தானம். புத்திர ஸ்தானமானது காதல் வாழ்க்கை, விளையாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கு துண்டிக்கப்படும். 7-ம் பாகமான குரு பார்வை திருமணத்திற்காக காத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு திருமணம் தடைபட்டு போகும். 9-ம் பாகமானது இரண்டாம் திருமணம், இரண்டாம் குழந்தை போன்றவைகள் இழுபறியாகும். இவர்கள் குருவை வணங்கி விரதம் இருப்பது நல்லது.

பரிகாரம்:

athisara guru peyarchi 2021 date: அதிசார பெயர்ச்சி அடைந்த குரு பகவான் 160 நாட்கள் வரை கும்ப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் குருபகவானை வணங்கி அவருக்கான மந்திரங்களை உச்சரித்து, நவகிரக சன்னதியில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, தானமாக கொண்டைக்கடலை பரிமாறி வந்தால் நல்ல பலன்களை காணலாம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 

 

Advertisement