August Month Palangal in Tamil
பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வகையான கிரகநிலை மாற்றம் ஏற்படும். அப்படி ஏற்படும் மாற்றம் பல வகையான யோகங்களை ஏற்படுத்தும். அப்படி ஏற்படும் யோகங்களில் ஒரு சில யோகங்கள் நமக்கு நன்மையை அளிக்கும். ஆனால் ஒரு சில யோகங்கள் நமக்கு தீமைகளை அளிக்கும். அதேபோல் தான் இந்த ஆகஸ்ட் மாதம் சிம்ம ராசியில் சதுர்கிரஹி யோகம் ஏற்பட உள்ளது. இந்த யோகம் பன்னிரண்டு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நன்மைகளை அளிக்கும். ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு மிக மிக நன்மைகளை அளிக்கின்றது அது எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை எல்லாம் பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம் வாங்க..
Which Zodiac Sign will Get Luck in August Month in Tamil:
ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி சிம்ம ராசியில் சதுர்கிரஹி யோகம் ஏற்படும். இதனால் சில ராசிக்காரர்களுக்கு மிக மிக நன்மைகளை அளிக்கின்றது அது எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை எல்லாம் பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
ரிஷபம்:
ஆகஸ்ட் மாதம் ஏற்படும் சதுர்கிரஹி யோகத்தினால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இருந்த அனைத்து பிரச்னைகளும் விலகும். உங்களின் அனைத்து நிதி பிரச்னைகளும் தீர்க்கப்படும்.
மேலும் உங்களின் நீண்ட நாட்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். இந்த ஆகஸ்ட் மாதம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் அல்லது முயற்சியிலும் நீங்கள் வெற்றியை அடைவீர்கள்.
கடன் தொல்லை தங்க முடியலையா அப்போ இதை மட்டும் ஒரு முறை செய்யுங்க போதும்
மிதுனம்:
இந்த ஆகஸ்ட் மாதம் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கை தலைகீழாக மாற போகின்றது. அதாவது நீங்க சந்தித்து கொண்டிருக்கின்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கி உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சி மலையில் நினைய போகின்றது.
மேலும் மிதுன ராசியை சேர்ந்த தொழிலதிபர்கள் இந்தக் காலத்தில் லாபம் அடைவார்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும். எதிர்பாராத லாபத்தைப் பெறுவீர்கள்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் ஏற்படும் சதுர்கிரஹி யோகம் பல நன்மைகளைத் தரும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் நல்ல காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் உங்களுக்கு தொழில் நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதனால் உங்களின் வாழ்க்கை தரமும் உயரும்.
மேஷத்தில் உருவாகும் மகா தன ராஜயோகம் இதனால் அதிர்ஷ்டத்தை தன்வசமாக்க போகும் 3 ராசிகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |