ஆவணி அவிட்டம் என்றால் என்ன.? அதன் வரலாறு என்ன.?

Advertisement

ஆவணி அவிட்டம் என்றால் என்ன.? | Avani Avittam Endral Enna | Avani Avittam History in Tamil

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆவணி அவிட்டம் என்றால் என்ன.? அதனை பற்றிய முழு விவரங்களை பின்வருமாறு விவரித்துள்ளோம். தமிழ் மாதங்களில் சிறப்பு வாய்ந்த மாதங்களில் ஒன்று தான் ஆவணி மாதம். ஆவணி மாதத்தில் வரக்கூடிய சிறப்பு மிக்க நாட்களில் ஒன்று தான் ஆவணி அவிட்டம். ஆவணி அவிட்டம் என்றாலே நம்மில் பலருக்கும் நினைவிற்கு வருவது பூணூல் மாற்றிக்கொள்ளும் சடங்கு தான். ஏனென்றால், ஆவணி அவிட்டம் அன்று பூணூல் மாற்றிக்கொள்வார்கள்.

இந்த ஆண்டு, ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி அன்று வருகிறது. பொதுவாக, ஆவணி அவிட்டம் அன்று பிரமாணர்கள் பூணூல் மாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆவணி அவிட்ட நாளில், கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெறும். ஆவணி அவிட்டம் பற்றி இதுபோன்ற விவரங்கள் மட்டுமே நமக்கு தெரியும். இதனை தவிர்த்து ஆவணி அவிட்டம் என்றால் என்ன.? என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

Avani Avittam Meaning in Tamil:

Avani Avittam History in Tamil

  • ஆவணி மாதத்தில் பவுர்ணமியும், அவிட்டம் நட்சத்திரமும் இணைந்து வருவது தான் ஆவணி அவிட்டம் ஆகும். இந்த நாள் ஆவணி மாதத்திலேயே வரக்கூடிய மிக முக்கியமான நாள் ஆகும். ஆவணி அவிட்ட நன்னாளில் தான் வேதங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. ஆவணி அவிட்ட நாளை ஹயக்ரீவ ஜெயந்தி என்று கூறுவார்கள். இந்நாளில் தான் பெருமாள், ஹயக்ரீவர் அவதாரம் எடுத்து அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்டார் என்று புராண கதைகள் கூறுகின்றன.
  • ஆவணி அவிட்டம் என்னும் சடங்கு ஆனது, உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் கடைபிடிக்கும் வழிபாடு ஆகும்.
  • பூணூல் மாற்றும் வழக்கம் உள்ளவர்கள், ஆவணி அவிட்டம் நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து நீர்நிலைகள் அருகில் உள்ள கோவில்களில் கூட்டமாக இணைந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய நூலை மாற்றி கொள்வார்கள்.
  • தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையருக்கு எள்ளும் அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் கொடுப்பார்கள். அதன் பிறகு, தாங்கள் அணிந்திருக்கும் பூணூலை புதுப்பித்து வேதங்கள் படிக்க தொடங்குவர்.
  • இந்நிகழ்வு பிராமணர் சமூகத்தில் கல்வி கற்பதை தொடங்குவதற்கான ஒரு முக்கியமான நாளாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ஒரு சில சமூகங்களில் பூணூல் அணிந்தவர்கள் தான் திதி கொடுப்பது, தெவசம் செய்வது போன்ற காரியங்களை செய்ய வேண்டும் என்ற வழக்கமும் உள்ளது.
  • ஆகஸ்ட் 19 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் 01 மணி வரையிலான நேரத்தில் பூணூல் மாற்றி கொள்ளலாம்.

Avani Avittam History in Tamil:

வேதங்களால் நான்கு வகைகள் உள்ளது. அஃதாவது, ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம் மற்றும்  அதர்வண வேதம் என்று நான்கு வேதங்கள் உள்ளது. இந்த வேதங்கள் அசுரர்களால் திருடப்பட்டு யாராலும் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, அசுரர்கள் திருடிய வேதங்களை மீட்டெடுத்தார். அந்நன்னாள் தான் ஆவணி அவிட்டம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ஆவணி அவிட்ட நன்னாளில் தான் வேதங்கள் படிக்க தொடங்குவார்கள். இந்நிகழ்வு உபகர்மா என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் பிராமணர்களுக்கு ஆவணி அவிட்டம் நன்னாள் மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement