கருப்பு நிற ஆடையை அணிய கூடாத ராசிகள்

Advertisement

கருப்பு ஆடை 

வணக்கம் நண்பர்களே இன்று நம் ஆன்மிக பதிவில் கருப்பு ஆடைகளை அணிய கூடாத  ராசிகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். கருப்பு நிற ஆடையை அணிவதற்கு இன்றைய தலைமுறையில் இருக்கும் பெண்களும் சரி ஆண்களும் சரி மிகவும் விரும்புவார்கள்,  கருப்பு நிறம் அதிகமான வெப்பத்தை ஈர்க்க கூடிய தன்மையை கொண்டதாகவும் இருக்கிறது, இதன் காரணமாகவும்  சிலரது வீட்டில் கருப்பு ஆடையை அணியக்கூடாது என்றும் சொல்வார்கள். மேலும் கருப்பு ஆடையை ஏன் அணிய கூடாது என்றும், எந்த ராசிக்கார்கள் அணிய கூடாது என்றும் நம் பொதுநலம்.காம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

P என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? அப்போ இதை பாருங்கள்

கருப்பு ஆடையை ஏன் அணிய கூடாது:

ஒரு சிலர் குரான் வழக்கத்தின் படி கருப்பு நிற ஆடைகளை அணிய கூடாது என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்வார்கள். கோவில்களுக்கு செல்லும் பொழுதும்  கருப்பு நிற ஆடைகளை அணிய கூடாது என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல் ஏதேனும் நல்ல காரியங்களுக்கு செல்லும் பொழுதும் கருப்பு ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.  சனி தோஷங்கள் இருப்பவர்கள் கட்டாயம் கருப்பு ஆடைகளை பயன்படுத்த கூடாது.

பொதுவாகவே ஒருவரின் ஜாதகத்தில் சனியின் தன்மை அதிகமாக இருக்கும் நபர்கள் தான் கருப்பு நிற ஆடையை அதிகமாக விரும்புவார்கள்.  சனி பகவான் ஒரு குளிர்ச்சி கிரகம் என்றும் சொல்லப்படுகிறது. சனிபகவானுக்கு பிடித்த நிறமும் கருப்பு தான். இதன் காரணமாகத்தான் இறந்தவர்கள் வீட்டிற்கு செல்லும் பொழுது ஆயுள்காரனுக்கு பிடித்த கருப்பு நிறத்தை அணிந்து கொண்டு போகிறார்கள்.

மேலும் இதில் எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் கருப்பு நிறத்தை அணியக்கூடாது என்று தெரிந்துகொள்ளலாம்.

கருப்பு ஆடையை அணிய கூடாத ராசிகள்:

கருப்பு நிற ஆடைகளை லக்கனத்தில் அடிப்படையில் மேஷ லக்கனம், கடக லக்கனம், சிம்ம லக்கனம், விருச்சிக லக்கனம், தனுசு லக்கனம், மீன லக்கனம்  ஆகிய லக்கணத்தை கொண்டவர்கள் கருப்பு நிற ஆடையை அணிவதை தவிர்ப்பது நல்லது என்றும் சொல்லப்படுகிறது.

ராசியின் அடிப்படியில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் கட்டாயம் இந்த கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது என்று ஜோதிடம் சொல்கிறது.

கருப்பு நிற ஆடையை தவறி அணிந்து விட்டால் அதற்கு பரிகாரமாக கருப்பு நிறத்தில் உள்ள நாய் மற்றும் பசுக்களுக்கு  உணவு அளிப்பது நல்லது.

 

இதுபோன்று ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள் 
Advertisement