ஆயர்பாடி மாளிகையில் பாடல் வரிகள்..! | Ayarpadi Maligaiyil Song Lyrics in Tamil

Advertisement

Ayarpadi Maligaiyil Song Lyrics in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே கடவுள் நம்பிக்கை என்பது அதிக அளவு இருக்கும். அதாவது ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு கடவுளை வணங்குவார்கள். அதேபோல் தான் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் ஒரு சிலர் பெருமாலையும் மற்றும் சிலர் சிவா பெருமானையும் வணங்குவார்கள். அப்படி பெருமாலை வணங்குபவர்கள் அவரின் பத்து அவதாரங்களையும் வணங்குவார்கள். அவரின் பத்து அவதாரங்களில் ஒன்றும் மக்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் மற்றும் கொண்டாடப்படும் அவதாரம் என்றால் அது கிருஷ்ண அவதாரம் தான். அப்படி நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த கிருஷ்ணரின் அழகினை போற்றி புகழும் ஆயர்பாடி மாளிகையில் பாடல் வரிகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து கிருஷ்ணரின் அருளை பெற்று கொள்ளுங்கள்.

நாராயணனின் ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள்

Ayarpadi Maligaiyil Lyrics in Tamil:

Ayarpadi Maligaiyil Lyrics in Tamil

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியதில்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

தீராத கஷ்டங்கள் தீர்க்கும் நரசிம்ஹர் மந்திரம்

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ

அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

ஐயப்பனின் இருமுடி கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

அவன் பொன்னழகை காண்பதர்க்கும் போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…

நம்மை காத்து அருளும் ஐயப்பனின் பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்

ஸ்ரீ நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திர வரிகள்

ஆயர்பாடி மாளிகையில் பாடல் வரிகள் Pdf 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் – Aanmeega Thagavalgal 

 

Advertisement