ஆயில்யம் நட்சித்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை இப்படி தான் இருக்கும்.

Advertisement

ஆயில்யம் நட்சத்திரம் பலன்கள்

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு ஆசை இருக்கு. ஒரு ஆசையை நிறைவேறியதும் மறு ஆசை வந்துவிடும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தினமும் ராசி பலன்களை பார்ப்பார்கள். அதாவது இன்றைய ராசி பலன், நாளைய ராசி பலன் போன்றவற்றை பார்ப்பார்கள். ஏனென்றால் தமது ராசிக்கான பலன்கள் எப்படி இருக்க போகிறது என்று பார்த்து கவனமுடன் இருப்பார்கள். இன்னும் சில நபர்கள் தமது எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை நினைத்து கவலைப்படுவார்கள். பல நபர்கள் தமது ஜாதகத்தை பார்த்து அவர்களுக்கான பலன்களை அறிந்து கொள்வார்கள். அந்த வகையில் இன்றைய ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் மற்றும் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்:

ஆயில்யம் நட்சத்திரம் பலன்கள்

ஆயில்யம் நட்சித்திரத்தில் பிறந்தவர்களின் கண்கள் அழகாகவும், சுருட்டை முடி உள்ளவராகவும் இருப்பார்கள். இவர்கள் எதிரிகளையும் நண்பர்களாக மாற்றி கொள்வார்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் அதிபதி புதன் பகவான். அதனால் பேச்சாற்றால் மிக்கவராக இருப்பார். மேலும் கல்வியில் சிறந்து விளங்க கூடியவர்களாக இருப்பார்கள்.

எந்த செயலையும் மற்றவர்களை நம்பி விட மாட்டார்கள். அவர்களே அந்த செயலை முடித்து விடுவார்கள். இயற்கையை அதிகம் விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள். அதே போல் சுற்றுலா அல்லது பயணம் செய்வது மிகவும் பிடிக்கும்.

எவ்வளவு பெரிய கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் மனம் தளராமல் எதிர்த்து போராடுவார்கள். அது போல் எந்த ஒரு செயலிலும் மற்றவர்களின் ஆலோசனையை கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை தான் செய்வார்கள்.

கல்வி:

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வியில் அதிகம் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். புத்தி கூர்மை உடையவர்களாக இருப்பார்கள். மேலும் அனைத்து துறைகளையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி தெரியுமா 

தொழில்:

இவர்கள் வேலை செய்யும் இடத்தில் நேர்மையாக நடந்து கொள்வார்கள். நிர்வாக திறமை உடையவர்களாக இருப்பார்கள். பொறியியல் துறையில் சிறந்து விளங்க கூடியவர்களாக இருப்பார்கள்.

குடும்பம்:

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் நடைபெறும். துணை மற்றும் குழந்தைகளுடன் அன்பை அதிகமாக செலுத்த கூடியவர்களாக இருப்பீர்கள். வாழ்க்கையை இப்படி தான் வாழ வேண்டும் என்று திட்டமிட்டு வாழ கூடியவர்களாக இருப்பீர்கள். மேலும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.

ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் வயிறு, நுரையீரல், குடல், கணையம்,  போன்றவற்றில் பிரச்சனை ஏற்படும். மேலும் மூட்டு வலி, கால் வலி சிறுநீரகத்தில் பிரச்சனை போன்றவை ஏற்படும். அதனால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட கல்:

மரகதம்

உகந்த நிறங்கள்:

பச்சை மற்றும் வெள்ளை

உகந்த நட்சத்திரம்:

பூரம், சுவாதி, அவிட்டம், சதயம், பூரட்டாதி, அஸ்தம் போன்ற நட்சத்திரங்கள் உங்க ராசிக்கு சாதகமா இருக்கிறது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் இப்படி தான் இருக்குமா 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement