ஆயில்யம் நட்சத்திரம் பெண்ணை திருமணம் செய்யலாமா | Ayilyam Nakshatra Female Marriage Life in Tamil
நண்பர்களே வணக்கம் இன்று ஆயில்யம் நட்சத்திர பெண்ணை திருமணம் செய்யலாமா. பொதுவாக திருமணம் என்றால் பெரிய கடமை என்று நினைப்பார்கள். அதனை சரியாக பிள்ளைகளுக்கு அமைத்து கொடுப்பது அனைத்து தாய் தந்தைக்கும் ஒரு கடமை. ஒரு பெண்ணை திருமணம் செய்ய அவர்களுடைய ராசி நட்சத்திரத்தை பார்த்து அது நன்மை தீமையை அளிக்குமா என்று தெரிந்துகொண்டு அதன் பின் திருமணம் செய்யும் ஆணுக்கும் அவரை சார்ந்தவருக்கும் எதுவும் பிரச்சனை வருமா என்று தெரிந்துகொண்டு அதன் பின் திருமணத்தை செய்வார்கள். அந்த வகையில் ஆயில்யம் நட்சத்திரக்காரரை தோஷம் நிறைந்தவர்கள் என்று திருமணம் செய்ய அச்சம் அடைவார்கள். ஆனால் அது தான் உண்மையா? இல்லை அது பொய்யானதா என்று தெரிந்துகொள்ள பின் வரும் பதிவுகளை படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!
பிறந்த தேதி வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது எப்படி? |
ஆயில்யம் நட்சத்திரம் பெண் குணங்கள்:
கடக ராசியில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆணாக இருந்தால் சமூகத்தில் நன்றாக மதிக்கப்படுவார்கள். அதே ஆயில்யம் பெண்ணின் குணம் பாம்பை போன்றது. அவர் வழியில் குறுக்கிட்டால் யாரையும் பார்க்காமல் கொத்துவதை போல் யாரையும் மதிக்கமாட்டார். எந்த விஷயத்தையும் அலட்சியமாக எடுத்துக்கொள்வார். இதுபோல் தான் ஆயில்யம் நட்சத்திரக்காரர் குணம்.
ஆயில்யம் நட்சத்திரம் பெண்ணை திருமணம் செய்யலாமா:
- ஆயில்யம் நட்சத்திர பெண்ணை திருமணம் செய்தால் திருமணம் செய்துகொண்டு அழைத்து செல்லும் ஆணுக்கு அனைத்து செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் ராசி. அவ்வப்போது துன்பம் வந்தாலும் அதனை முடித்து அதே வேகத்தில் நன்மையை அளிக்கும். எடுத்த காரியத்தில் எப்போதும் வெற்றியை மட்டும் நாட்ட வேண்டும் என்று நினைக்கும் குணம் கொண்டவர்.
- கணவன் மனைவி இருவரும் எவ்வளவு சண்டை ஏற்பட்டாலும் யாருக்கும் நடுவில் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் பேசிக்கொள்வார்கள்.
- ஆயில்யம் நட்சத்திர பெண் கணவன் மீது அளவுகடந்த அன்பை செலுத்துபவராக இருப்பார்கள். எனவே ஆயில்யம் நட்சத்திர பெண்ணை தாராளமாக திருமணம் செய்யலாம். அதன் மூலம் வீட்டிற்கு அன்பும் ஆதரவும் அதிகமாக கிடைக்கும்.
பிறந்த நேரம் தேதி இரண்டும் தெரியாது வாழ்க்கை பலன்களை எப்படி பார்ப்பது |
Ayilyam Natchathiram Characteristics in Tamil:
- ஆயில்யம் நட்சத்திரக்காரரை திருமணம் செய்து கொண்டால் மாமியாருக்கு ஆகாது. அவர் உயிருக்கு ஆபத்து என்று அனைவரும் ஒரு பயத்தை உருவாக்கி அந்த நட்சத்திர பெண்களுக்கு அனைத்து விதத்திலும் திருமணத்தில் பிரச்சனைகள் ஏற்படுட்டு நின்று இருக்கிறது தெரியுமா. ஆனால் அது முற்றிலும் தவறான ஒன்று.
- ஆயில்யம் நட்சத்திரதில் பிறந்தவர்கள் துக்கத்திலும், கோவத்திலும் மற்றவர்களை போல் இல்லாமல் வித்தியாசமாக இருப்பார்கள் ஏனென்றால் அவர்கள் பிறந்த நட்சத்திர பலன் அவரை மாற்றி வித்தியாசமாக வைக்கும்.
- இந்த நட்சத்திர பெண்ணுக்கு அதிகம் தூங்குவது பழக்கம் அதனால் வீட்டில் மாமியாருக்கும் மருமகளுக்கும் அடிக்கடி சண்டை வந்தாலும் அது அவ்வப்போதே முடிந்து சரியாகி விடுவார்கள். அதனால் இந்த நட்சத்திர பெண்ணை திருமணம் செய்தால் குடும்பத்தில் உள்ள யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |