வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆயுத பூஜைக்கு தேவைப்படும் பொருட்களின் பட்டியல்.!

Updated On: September 23, 2025 4:24 PM
Follow Us:
Ayudha Pooja Items List in Tamil
---Advertisement---
Advertisement

ஆயுத பூஜை பொருட்கள் பட்டியல் | Ayudha Pooja Items List in Tamil

ஆன்மீக வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆயுத பூஜைக்கு தேவைப்படும் பொருட்கள் பற்றி (Ayudha Pooja Items List in Tamil) பின்வருமாறு கொடுத்துள்ளோம். நவராத்திரியின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது தான் ஆயுத பூஜை. கலைமகள், அலைமகள், மலைமகள் என முப்பெரும் தேவிகளில் கலைமகள் எனப்படும், சரஸ்வதி தேவியை நவராத்திரி காலத்தில் வழிபடும் நாள் தான் ஆயுத பூஜை.

கல்வி அறிவினை கொடுப்பவள் சரஸ்வதி தேதி. எனவே, சரஸ்வதி பூஜை/ஆயுத பூஜை அன்று கல்வி சம்மந்தமான பொருட்கள் மற்றும் நம் தொழிலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். அதுமட்டுமில்லாமல், ஆயுத பூஜை பூஜைக்கு சில பொருட்களை கட்டாயம் வைத்து வழிப்பட வேண்டும். ஆனால். நம்மில் பலருக்கும் ஆயுத பூஜைக்கு என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்பதே தெரிவதில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

வாழ்க்கையில் யோகம் பெறுவதற்கு சரஸ்வதி பூஜையை இப்படி செய்து வழிபடுங்கள்

Ayudha Pooja Items List in Tamil:

  • சரஸ்வதி தேவியின் சிலை
  • மரப் பீடம்
  • வெள்ளைநிற வஸ்திரம்
  • மல்லிகை பூக்கள்
  • மாவிலைகள்
  • மாலைகள்
  • மஞ்சள்
  • குங்குமம்
  • சந்தனம்
  • திருநீறு
  • பச்சரிசி
  • தேங்காய்
  • வெற்றிலைகள்
  • பாக்குகள்
  • வாழைப்பழம்
  • எலுமிச்சை
  • கரும்பு
  • இதர பழங்கள்
  • கிழியாத பச்சை வாழை இலை
  • நெய்
  • எண்ணெய்
  • சாம்பிராணி
  • கற்பூரம்
  • விளக்கு
  • ஊதுபத்தி
  • அரிசிப்பொரி
  • கொண்டைக்கடலை
  • பொங்கல்
  • பூசணிக்காய்
  • வாழைக் கன்று

மேலும், தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்கள்/கருவிகள் ஆயுதங்கள், வாகனங்கள், புத்தகங்கள், கல்விப் பொருட்கள் சரஸ்வதி படத்திற்கு முன்னாள் வைத்து வழிபட வேண்டும்.

ஆயுத பூஜை முன் தினமே, வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து பூஜை அறையில் உள்ள சரஸ்வதி படங்கள் உட்பட அனைத்து தெய்வங்களின் படங்களையும் துடைத்து சுத்தம் செய்து பூ, பொட்டு வைத்து விட வேண்டும். அதன் பிறகு, ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

மறுநாள், ஆயுத பூஜை அன்று மேலே கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்த்தையும் சரஸ்வதி தேவியின் முன்னால்  வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்தால் சரஸ்வதியின் அருள் கிடைக்கும்.

ஆயுத பூஜைக்கு வாங்குன பொரி நிறைய இருக்கா அப்போ மழைக்கு இதமாக இந்த டிஷ் பண்ணுங்க..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now