ஆயுத பூஜை செய்வதற்கு உகந்த நேரம் எப்போது.?

Advertisement

ஆயுத பூஜை 2023 நல்ல நேரம்

இந்துக்கள் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாக நவராத்திரி பூஜை உள்ளது. இந்த நவராத்திரி பூஜையில் துர்க்கை அம்மனை 3 நாட்கள் பூஜை செய்யப்படுகின்றது. அடுத்த மூன்று நாட்களுக்கு லட்சுமியை வழிபாடு  செய்ய வேண்டும். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யப்படுகின்றது. கடைசியாக சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதால் சரஸ்வதி பூஜை என்று கூறுகிறோம். ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கல்வி ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது.அப்படி நாம் சரஸ்வதியை வழிபடுவதால் நமக்கு கல்வி ஞானம் பெருகும். கல்வி எப்படி முக்கியமோ அதே போல அவர்கள் செய்யும் தொழிலும் முக்கியமானது. செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழி இருக்கிறது. அதனால் தான் கடவுளின் முன் நாம் தொழில் செய்ய பயன்படுத்தப்படும் கருவிகளை வைத்து வணங்குகிறோம். இப்படி பூஜை செய்வதற்க்கு உகந்த நேரத்தை பார்த்து தான் வணங்குவோம். அதனால் தான் இந்த பதிவில் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை செய்வதற்கான நேரத்தை பற்றி பார்ப்போம்.

ஆயுத பூஜை செய்வதற்கான நேரம்:

ஆயுத பூஜை 2023 நல்ல நேரம்

2023-ம் ஆண்டிற்கான ஆயுத பூஜை அக்டோபர் 23-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12க்கு மேல் 1.30 க்குள் பூஜை செய்ய நல்ல நேரமாக இருக்கிறது.

மாலை நேரத்தில்  6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். அதனை தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் பூஜையை செய்யலாம்.

ஆயுத பூஜை வாழ்த்துக்கள் 2023..!

விஜயதசமி பூஜை 24-ம் தேதி வருகின்றது, அதாவது ஆயுத பூஜை மறுநாள் வருகின்றது. அதனால் இந்த பூஜையை செய்வதற்கு மாலை 05.22 முதல் 06.59 வரை பூஜையை செய்யலாம்.

வழிபாடு எப்படி.?

ஆயுத பூஜை அன்று வழிபாடு செய்வதற்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியங்கள் அம்பாளுக்கு பிரியமான சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல், பொறி, பழங்கள் ஆகும். அவரவர் வழிபடும் இடத்தில் சுவாமி படங்களை வைத்து தேங்காய், வாழைப்பழம், பூ, வெத்தலை பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி வைத்து விளக்கேற்றி தீபாராதனை காட்டி இறைவனை வழிபடலாம்.

வாழ்க்கையில் யோகம் பெறுவதற்கு சரஸ்வதி பூஜையை இப்படி செய்து வழிபடுங்கள்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement