ஆயுத பூஜை வழிபாடு/ Ayudha pojai valipadu
இன்றைய பதிவில் ஆயுத பூஜை வழிபாடு செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்க போகிறோம். இந்துக்கள் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாக நவராத்திரி பூஜை உள்ளது. இந்த நவராத்திரி பூஜையில் துர்க்கை அம்மனுக்கு 3 நாட்கள் பூஜை செய்யப்படுகின்றது. அடுத்த மூன்று நாட்களுக்கு லட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்யப்படுகின்றது. கடைசியாக சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதால் சரஸ்வதி பூஜை என்று கூறுகிறோம்.
மேலும், ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கல்வி ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி நாம் சரஸ்வதியை வழிபடுவதால் நமக்கு கல்வி ஞானம் பெருகும். கல்வி எப்படி முக்கியமோ அதே போல அவர்கள் செய்யும் தொழிலும் முக்கியமானது. செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழி இருக்கிறது. அதனால் தான் கடவுளின் முன் நாம் தொழில் செய்ய பயன்படுத்தப்படும் கருவிகளை வைத்து வணங்குகிறோம். இப்படி பூஜை செய்வதற்க்கு உகந்த நேரத்தை பார்த்து தான் வணங்குவோம். அதனால் தான் இந்த பதிவில் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வழிபடும் முறை பற்றி பார்க்கலாம் வாங்க…
வீட்டை சுத்தம் செய்தல்:
ஆயுத பூஜை அன்று வீட்டை சுத்தம் செய்தும், வீட்டை துடைத்தும்,நீங்கள் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.
பூஜை பொருட்கள்:
பூஜை பொருட்களான மஞ்சள், குங்குமம், பூக்கள், கற்பூரம்,வெற்றிலை, பாக்கு, தேங்காய் ஊதுபத்தி எண்ணெய், விளக்கு மற்றும் வீட்டில் இருக்கும் கருவிகள், புத்தகங்கள் ஆகியவற்றை பூஜை அறைக்குள் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும்.
ஆயுத பூஜை செய்வதற்கு உகந்த நேரம் எப்போது.?
ஆயுத பூஜை செய்யும் முறைகள்:

- பூஜைக்கு தேவையான பொருட்களை வைத்து விளக்கேற்றி கருவிகளை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
- உங்கள் வீட்டில் இருக்கும் கருவிகள் ,புத்தகங்கள் மற்றும் வாகனகள் ஆகியவற்றிக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூக்கள் மற்றும் மாலைகள் போட்டும் வழிபாடு செய்ய வேண்டும்.
- கடைசியாக நைவேத்தியம் செய்த பொரிகடலை மற்றும் பிரசாதங்களை அனைவருக்கும் கொடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
ஆயுத பூஜையின் நன்மைகள் :
- ஆயுத பூஜை வழிபாடு செய்வதன் மூலம் வெற்றி மற்றும் வாழ்க்கை மேம்படுவதற்கான தெய்வீக அருளை வழங்குகிறது.
- நாம் பயன்படுத்தும் கருவிகளை வைத்து வழிபாடு செய்வது மரியாதை செலுத்துவதன் மூலம் அவை நீண்ட காலம் உழைக்கவும், நல்ல முறையில் பயன்படுத்தவும் முடியும்.
- மகிஷாசுரனை துர்க்கை அம்மன் வென்றதை நினைத்து இந்த வழிபாடு செய்யப்படுகிறது.
- ஆயுத பூஜையில் லட்சுமி, சரஸ்வதி மற்றும் பார்வதி தேவியை வழிபடுவதன் மூலம் ஞாபக சக்தி மற்றும் செல்வம் பெறுக செய்கிறது.
- மேலும், அலுவலகம் மற்றும் கடைகளில் வழிபாடு செய்வதன் மூலம் தொழிலில் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை பெற செய்கிறது.
| இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |











