Ayudha Puja 2024 Date and Time in Tamil | ஆயுத பூஜை தேதி 2024
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை எப்போது வருகிறது என்பதை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். இந்துக்களின் பண்டிகைகளில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் விழா ஆகும். புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை நவமி நாளில் கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என்றாலே, நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது நாம் பயன்படுத்தும் ஆயுதங்களும், தொழில் செய்யும் இடங்களில் உள்ள பொருட்களுக்கும், கல்வியை கொடுக்கும் புத்தகத்திற்குள் பூ பொட்டு வைத்து வழிபாடு செய்வது தான். எனவே, இந்த ஆண்டு ஆயுத பூஜை எப்போது வருகிறது.? என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில், இப்பதிவில் பின்வருமாறு Ayudha Puja 2024 Date and Time in Tamil பற்றி கொடுத்துள்ளோம்.
ஆயுத பூஜை வாழ்த்துக்கள் 2024..!
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தேதி மற்றும் நேரம் 2024 | Ayudha Pooja Saraswathi Pooja 2024 in Tamil:
இந்த ஆண்டு 2024 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆங்கில தேதிக்கு அக்டோபர் 11 ஆம் தேதியும், தமிழ் தேதிக்கு புரட்டாசி 25 ஆம் தேதியும் வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.நல்ல நேரம்:
மதியம் | 12:15 PM முதல் 01:15 PM வரை |
மாலை | 04:45 PM முதல் 05:45 PM வரை |
கெளரி பஞ்சாங்க நல்ல நேரம்:
மதியம் | 01:45 AM முதல் 02:45 AM வரை |
மாலை | 04:45 PM முதல் 05:45 PM வரை |
ஆயுத பூஜை நாளில், நம்முடைய தொழிலுக்கு உதவும் ஆயுதங்களையும், கருவிகளையும் சுத்தம் செய்து பூஜை செய்து கொண்டாடுகிறோம். தொழில் சிறக்க ஆயுத பூஜை நாளை நாம் கொண்டாடுகிறோம். நம்மை வாழவைக்கும் தெய்வங்களையும், ஆயுதங்களையும் வணங்கும் நாள் ஆயுத பூஜை.
கல்விக்கு அதிபதி சரஸ்வதி தேதி. கல்வி ஞானத்தை அருள்பவள் சரஸ்வதியே. எனவே, அன்றைய தினத்தில் கல்விக்கு பயன்படும் பொருட்களுக்கான புத்தகம், நோட்டு, பேனா அனைத்திற்கும் பொட்டு பூ வைத்து வழிபடுகிறோம்.
வாழ்க்கையில் யோகம் பெறுவதற்கு சரஸ்வதி பூஜையை இப்படி செய்து வழிபடுங்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |